Published:Updated:

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா குடும்பத்தினருக்கு தொடர்பு: சுப்பிரமணியன் சாமி

Vikatan Correspondent
ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா குடும்பத்தினருக்கு தொடர்பு: சுப்பிரமணியன் சாமி
ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா குடும்பத்தினருக்கு தொடர்பு: சுப்பிரமணியன் சாமி
ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா குடும்பத்தினருக்கு தொடர்பு: சுப்பிரமணியன் சாமி

பாட்னா: ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு தொடர்பு  உள்ளதாகவும், கமிஷன் பணம் இத்தாலியில் வசிக்கும் சோனியா காந்தியின்  சகோதரிகளை போய் சேர்ந்துள்ளதாகவும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி  குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது  இக்குற்றச்சாட்டைக் கூறிய அவர், "இந்த ஊழல் எனக்கு ஆச்சரியத்தை  ஏற்படுத்தவில்லை. வி.வி.ஐ.பி.க்களின் பயணத்துக்காக முன்னர், வேறொரு நிறுவனத்தின்  ஹெலிகாப்டரை தான் வாங்குவதாக இருந்தது. ஆனால், சில தொழில்நுட்ப  குறைபாடுகளை காரணம் காட்டி அந்த நிறுவனத்தை மாற்றி விட்டார்கள்.

##~~##
எல்லாமே கமிஷனுக்காகத்தான். இந்த கமிஷனில் பெரும் பகுதியை நேரு-காந்தி  குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர். இதில் சரிபாதி இத்தாலியில் வசிக்கும்  சோனியா காந்தியின் இரு சகோதரிகளுக்கும் போய் சேர்ந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு இந்த ஊழலில் தொடர்பு  உள்ளது. அதனால், இந்த ஊழல் தொடர்பான உண்மைகள் வெளியே வருவதை ஐக்கிய  முற்போக்கு கூட்டணி அரசு விரும்பவில்லை.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் ஆகியோர் பதவி வகித்த  காலங்களில் இதைப்போன்ற லஞ்ச, ஊழல்கள் இருந்தது கிடையாது.
நேரு-காந்தியின் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் ஊழல்  நடைபெற்றுள்ளது" என்றார்.