Published:Updated:

ஹெலிகாப்டர் ஊழல்: முன்னாள் விமானப்படைத் தளபதியிடம் சி.பி.ஐ. விசாரணை!

ஹெலிகாப்டர் ஊழல்: முன்னாள் விமானப்படைத் தளபதியிடம் சி.பி.ஐ. விசாரணை!
ஹெலிகாப்டர் ஊழல்: முன்னாள் விமானப்படைத் தளபதியிடம் சி.பி.ஐ. விசாரணை!
ஹெலிகாப்டர் ஊழல்: முன்னாள் விமானப்படைத் தளபதியிடம் சி.பி.ஐ. விசாரணை!

புதுடெல்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதி எஸ்.பி.தியாகி மற்றும் அவரது உறவினர்களிடம் சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வி.ஐ.பி.க்களின் பயணத்துக்காக ரூ.3,600 கோடி மதிப்பில் 12 நவீன ஹெலிகாப்டர்களை இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஆர்டரை

பெறுவதற்காக அந்த நிறுவனம் இந்தியத் தரப்புக்கு 10 சதவீத கமிஷன் அளித்ததாக இத்தாலியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்த அந்நாட்டுப் புலனாய்வு அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையில், "இந்த பேரம் தொடர்பாக கெரோசா மற்றும் ஹேஸ்செக் ஆகிய இடைத்தரகர்கள் இந்திய முன்னாள் விமானப்படைத் தளபதி தியாகியின் குடும்பத்தாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, அவரது உறவினர்களான ஜூலி, டாக்சா மற்றும் சந்தீப் ஆகிய மூவருக்கும் இதில் தொடர்புள்ளது.

##~~##
இவர்கள் மூலம் ஹெலிகாப்டர் டெண்டரில் உள்ள சில விதிகளை மேற்கண்ட இடைத் தரகர்கள் மாற்றியுள்ளனர். அதாவது, 18 ஆயிரம் அடி உயரத்தில் ஹெலிகாப்டர் பறக்க வேண்டும் என்பதற்குப் பதில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தால் போதும் என்று டெண்டரில் மாற்றப்பட்டது. இதன்மூலம், இந்த டெண்டரில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் பங்கேற்க முடிந்தது. இதேபோல் ஹெலிகாப்டரின் என்ஜின் தொடர்பான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டன.
தவிர, இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளும் இடைத்தரகர்களுக்கு ரூ.2.8 கோடி லஞ்சம் கொடுத்தனர்.அதில் ஒரு பகுதி தொகையான ரூ.72 லட்சம் தியாகியின் உறவினர்களுக்குக் கொடுக்கப்பட்டது" எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தியாகியின் உறவினர்கள் மறுத்தனர்.

தியாகியிடம் விசாரணை
இந்நிலையில்,இடைத்தரகர்களிடம் நெருக்கமாக இருந்து லஞ்சம் வாங்கியது தொடர்பாக தியாகியின் குடும்பத்தைச் சேர்ந்த ஜூலி மற்றும் டாக்சா ஆகிய இருவரிடமும் தில்லியில் சி.பி.ஐ.அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து,டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு தியாகி மாலை 3 மணிக்கு வந்தார்.அவரிடம் சி.பி.ஐ.அதிகாரிகள் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தினர்.