Published:Updated:

ஹெலிகாப்டர் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது உண்மை - ஏ.கே. அந்தோணி ஒப்புதல்!

ஹெலிகாப்டர் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது உண்மை - ஏ.கே. அந்தோணி ஒப்புதல்!
ஹெலிகாப்டர் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது உண்மை - ஏ.கே. அந்தோணி ஒப்புதல்!

புதுடெல்லி: பிரதமர் உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் பயணத்திற்காக, இத்தாலியின் ஃபின்மெக்கனிகா நிறுவனத்திடம் ஹெலி காப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பது உண்மை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இந்தியாவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கான 12 ராயல் ஹெலிகாப்டர்களை வாங்க சுமார் 3700 கோடி அளவிற்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் இந்தியர்களுக்கும் இத்தாலியர்களுக்கும் சுமார் 350 கோடி வரை கையூட்டு கொடுக்கப்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் செய்திகள் வந்தன.

ஹெலிகாப்டர் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது உண்மை - ஏ.கே. அந்தோணி ஒப்புதல்!

ஆனாலும், இந்த விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மௌனம் சாதித்து வந்தார். ''தவறுகள் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மட்டும் கூறிவந்தார் அந்தோனி. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஒந்த ஊழல் விவகாரத்தில் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் இத்தாலியில் கைது செய்யப்பட்ட பின்னர் தான் இந்தியா உஷாரானது. தங்களுக்கு இத்தாலி அரசிடமிருந்து தகவல்கள் கிடைக்கவில்லை என்று கூறிவந்த பாதுகாப்பு அமைச்சகம், பின்னர் கடந்த மாதம் இறுதியில் இந்த விவகாரம் குறித்து சிபிஐ க்கு தகவல் கொடுத்து விசாரிக்கச் சொன்னது.

 
ஹெலிகாப்டர் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது உண்மை - ஏ.கே. அந்தோணி ஒப்புதல்!
இதையொட்டி இத்தாலிக்கே சென்று விசாரணை நடத்தியது சி.பி.ஐ. இந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களை இந்தியாவுக்கு வழங்க இத்தாலி அதிகாரிகள் முரண்டு பிடித்த அதேநேரம், 350 கோடி பேர‌ விவகாரத்தில் முன்னாள் விமானப்படைத் தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர்கள், சில இத்தாலி சுவீஸ் இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் மீது சிபிஐ எஃப்.ஐ. ஆர். பதிவு செய்தது.
இதுவரை  இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது குறித்தும் லஞ்சம் வாங் கப்பட்டது குறித்தும் மௌனம் சாதித்து வந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இப்போது மௌனம் கலைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சி.ஏ.ஜி.[இந்திய தணிக்கைத்துறை] அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். இவைகளுக்கும் பதிலளிக்காமல் இருந்தது பாதுகாப்பு அமைச்சகம்.
ஆனால் இன்று டெல்லியில், பத்திரிகையாளர் களிடம்  பேசிய  ஏ.கே.அந்தோணி, '' இந்த ஹெலிகாப்டர் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது உண்மை'' என்று ஒத்துக்கொண்டார். ''தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பான நடவடிக்கை இருக்கும். இந்த விஷயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நான் அளித்த வாக் குறுதியை நிறைவேற்றியே தீருவேன். இனி பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத்திற்கான‌ கொள்முதல் விவகாரங்களில் புதிய கொள்கையை வகுக்கும் என்று சொன்ன‌ அந்தோணி, ''எதிர்காலத்தில் ராணுவத்தளவாடங்களை இறக்குமதி செய் வதை தவிர்க்கப்படும். புதிய ராணுவ கொள்முதல் கொள்கையின்படி ராணுவத்திற்கு தேவையான தளவா டங்களை இந்தியாவிலே தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்துவிட்ட தைரியத்தில் உண்மையை பேசி இருக்கிறார் அந்தோணி. இது எனென்ன‌ கலவரத்தை உண்டாக்கப் போகிறதோ காங்கிரஸுக்கே வெளிச்சம்!
- சரோஜ் கண்பத்