Published:Updated:

எதிர்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

எதிர்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
எதிர்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
எதிர்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்  ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை இன்று காலை கூடியதும் நிலக்கரி ஊழல், 2ஜி விவகாரம் மற்றும் டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு நிலக்கரி ஊழல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்திய பா.ஜனதா உறுப்பினர்கள், பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

##~~##
இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால், அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் மீரா குமார். அவை மீண்டும் கூடியபோதும் இதே நிலை காணப்பட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.நாளை விடுமுறை என்பதால், அவை இனி வருகிற வியாழக்கிழமையன்றுதான் கூடும்.

மாநிலங்களவை

இதனிடையே மாநிலங்களவையிலும் இதே நிலை காணப்பட்டதால், அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் அவை கூடியபோதும், அதே நிலைமை நீடித்ததால், அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.