Published:Updated:

பிரதமர் பதவி விலக பா.ஜனதா, இடதுசாரிகள் போர்க்கொடி; சோனியா நிராகரிப்பு

பிரதமர் பதவி விலக பா.ஜனதா, இடதுசாரிகள் போர்க்கொடி; சோனியா நிராகரிப்பு
பிரதமர் பதவி விலக பா.ஜனதா, இடதுசாரிகள் போர்க்கொடி; சோனியா நிராகரிப்பு
பிரதமர் பதவி விலக பா.ஜனதா, இடதுசாரிகள் போர்க்கொடி; சோனியா நிராகரிப்பு

புதுடெல்லி:தொடர்ந்து வெளியாகும் ஊழல் புகார்களுக்கு பொறுப்பேற்றும், ஊழல்களை மூடி மறைப்பதற்காகவும் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

டெல்லியில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானி தலைமையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், பிரதமர் பதவி விலக கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊழல்களுக்கு பொறுப்பு ஏற்கும் வரை மத்திய அரசுக்கு ஒத்தழைப்பு தரப் போவதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற பா.ஜனதாவின் கோரிக்கைக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதமர் தமது கடமையை செய்ய பலமுறை தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றத்திலும் இன்று இந்த ஊழல் பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

காங்கிரஸ் நிராகரிப்பு

##~~##
இந்நிலையில்,  பா.ஜனதா மற்றும் இடதுசாரிகளின் இந்த கோரிக்கையை  காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கமல்நாத்," பா.ஜனதா கூறும் புகார்களுக்கு எதற்கும் அடிப்படை முகாந்திரம் இல்லை. அக்கட்சி மக்களை திசை திருப்பும் யுக்தியை கையாளுகிறது. முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அக்கட்சி தடையாக இருக்கிறது.
ஜனநாயக முறைப்படி முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மட்டும்தான் விவாதம் நடைபெற வேண்டும்.ஆனால் அதை பா.ஜனதா கட்சி ஒருமுறை கூட பின்பற்றியதில்லை" என்று கூறினார்.
சோனியா - மன்மோகன் ஆலோசனை
இதனிடையே எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளதால், இவ்விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை  சோனியா காந்தி நிராகரித்துள்ளார்