Published:Updated:

ஆ.ராசாவை விசாரணைக்கு அழைக்காதது ஏன்? பி.சி.சாக்கோ விளக்கம்

ஆ.ராசாவை விசாரணைக்கு அழைக்காதது ஏன்? பி.சி.சாக்கோ விளக்கம்
ஆ.ராசாவை விசாரணைக்கு அழைக்காதது ஏன்? பி.சி.சாக்கோ விளக்கம்
ஆ.ராசாவை விசாரணைக்கு அழைக்காதது ஏன்? பி.சி.சாக்கோ விளக்கம்

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை விசாரணைக்கு அழைக்காதது ஏன்? என்பது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ விளக்கம் அளித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தை விசாரித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க விரும்புவதாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறியிருந்தார். ஆனால் நேரில் ஆஜராக தேவை இல்லை, விளக்கத்தை அறிக்கையாக கொடுத்தாலே போதுமானது என்று கூட்டுக்குழு அறிவித்தது. இதையடுத்து 112 பக்க விளக்க கடிதத்தை கூட்டுக்குழுவுக்கு அனுப்பினார் ராசா.

##~~##
இதனிடையே, வெளியான கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை சேர்த்திருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், வாஜ்பாய் பெயரை சேர்க்கவில்லை என்று பி.சி.சாக்கோ மறுத்தார்.
அதே சமயம் இந்த கூட்டுக்குழுவில் உள்ள காங்கிரஸ் அல்லாத மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த அறிக்கையை தோற்கடிக்க முடிவு செய்துள்ளனர். இந்த அறிக்கையில் பிரதமர் மற்றும் நிதியமைச்சரை காப்பாற்றுவதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. அதோடு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயரையும் சேர்த்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
கூட்டுக்குழு அறிக்கை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள கூட்டுக்குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ, அறிக்கையில் கூறப்பட்டதற்கு மாறாக எதிரான கருத்துகள் வந்தால் அதனை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
ஆ.ராசாவை விசாரணைக்கு அழைக்காதது ஏன்? பி.சி.சாக்கோ விளக்கம்
மேலும் அவர் கூறுகையில், 25ஆம் தேதி கூட்டுக்குழுவின் கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா அளித்துள்ள விளக்கங்கள் அறிக்கையில் சேர்க்கப்படும். அவர் சமீபத்தில் அளித்துள்ள விளக்கத்தில் புதிதாக ஒன்றும் இல்லை. எனவே அவரை நேரடியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் மறுபரிசீலனை செய்ய தேவை இல்லை.
இந்த தகவலை ஆ.ராசாவிடமே நான் தெரிவித்துவிட்டேன். அதுமட்டுமல்ல, ஆ.ராசாவை விசாரணைக்கு அழைத்தால், 10 முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரிகளை குழுவின் முன் ஆஜராக அழைக்க வேண்டியிருக்கும்.நான் குழு உறுப்பினர்கள் அனைவருடனும் நல்ல ஒத்துழைப்புடன் நடந்து கொள்கிறேன். நான் குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவருடனும் முழு அளவில் கலந்து ஆலோசித்துள்ளதாக நம்புகிறேன். கூட்டுக்குழு ‘‘காங்கிரஸ் குழு’’ அல்ல, ஆனால் நாடாளுமன்றத்தின் ஒரு குழு. இதில் மெஜாரிட்டி, மைனாரிட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை.
குழுவின் வரைவு அறிக்கை தகவல் வெளியானது துரதிர்ஷ்டவசமானது. இது தொடர்பாக ஏதாவது விசாரணை நடத்தினால் கூட நான் மகிழ்ச்சி அடைவேன். அதேபோல இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததையும் நான் வரவேற்கிறேன்.எதிர்க்கட்சிகள் இந்த குழுவின் அறிக்கையை ஏற்க மறுத்தால், அவர்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழு தேவை இல்லை என்று கருதுவதாக அர்த்தம். இதற்காக அவர்கள் ஒரு நாடாளுமன்ற கூட்டத்தொடரையே வீணடித்திருக்கிறார்கள் என்று பி.சி.சாக்கோ கூறினார்.