Published:Updated:

நிலக்கரி சுரங்க ஊழல்: டெல்லி, ஹரியானா உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக டெல்லி, ராய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் சிபிஐ இன்று சோதனை நடத்தியது.

நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை, சட்டத் துறை அமைச்சகத்துடன் பகிர்ந்து கொண்டதாக நேற்று சிபிஐ அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பான விசாரணை ஏப்ரல் 30ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று ஸ்டீல் நிறுவனம் ஒன்றின் மீது புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 11வது

##~~##
வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராய்ப்பூர், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட இடங்களிலும், நிலக்கரி ஊழல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.