Published:Updated:

என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது: பி.சி.சாக்கோ

என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது: பி.சி.சாக்கோ
என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது: பி.சி.சாக்கோ
என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது: பி.சி.சாக்கோ

புதுடெல்லி: "தம்மை பதவி நீக்கம் செய்ய எந்த விதியும் இருப்பதாக தெரியவில்லை" என்று நாடாளுமன்றக் கூட்டுக்குழுத் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் அறிக்கையில் இடம் பெற்றிருந்த தகவல்கள் முன்கூட்டியே ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து, பி.சி. சாக்கோ பதவி விலக வேண்டும் என, பா.ஜ.க., தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவை தலைவர் மீராகுமரிடம், தம்மை பதவி நீக்கம் செய்யுமாறு நாடாளுமன்றக் கூட்டுக்குழு உறுப்பினர்கள் முறையிட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாக்கோ, பதவி விலகுமாறு நாடாளுமன்றக் கூட்டுக்குழு உறுப்பினர்கள் நேரடியாக கேட்டிருந்தால் பதவி விலகுவது பற்றி யோசித்திருப்பேன் தெரிவித்துள்ளார்.

##~~##
மேலும், தம்மை பதவி நீக்கம் செய்ய எந்த விதியும் இருப்பதாக தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கும் எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் சாக்கோ தெரிவித்துள்ளார்.