Published:Updated:

2ஜி வழக்கு: பிரதமர், நிதியமைச்சரை சாட்சிகளாக சேர்க்க கோரிய மனு விசாரணைக்கு ஏற்பு

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பிரதமர், நிதியமைச்சர் ஆகியோரை சாட்சிகளாக சேர்க்கக் கோரும் மனுவை டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லி சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

2ஜி வழக்கு: பிரதமர், நிதியமைச்சரை சாட்சிகளாக சேர்க்க கோரிய மனு விசாரணைக்கு ஏற்பு

இந்த நிலையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன் சி்ங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை சாட்சிகளாக சேர்க்க கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடர்ந்தார்.

##~~##
இந்த வழக்கு சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி சைனி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2ஜி வழக்கில் பிரதமர், நிதியமைச்சரை சாட்சிகளாக சேர்க்க கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி சைனி, ஜூலை 6ஆம் தேதி வாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.