Published:Updated:

நிலக்கரி ஊழல்: சென்னை உட்பட நாடு முழுவதும் பா.ஜ. ஆர்ப்பாட்டம்!

நிலக்கரி ஊழல்: சென்னை உட்பட நாடு முழுவதும் பா.ஜ. ஆர்ப்பாட்டம்!
நிலக்கரி ஊழல்: சென்னை உட்பட நாடு முழுவதும் பா.ஜ. ஆர்ப்பாட்டம்!
நிலக்கரி ஊழல்: சென்னை உட்பட நாடு முழுவதும் பா.ஜ. ஆர்ப்பாட்டம்!

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழலை கண்டித்து, பா.ஜனதா கட்சி சார்பில் இன்று சென்னை உட்பட நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையில் தலையிட்டதற்காக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், இல. கணேசன் உள்ளிட்ட தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா கட்சியின் துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி,"ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு மற்றும் பல்வேறு ஊழல் விவகாரம் தொடர்பாக நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களில் தர்ணாக்கள், பேரணிகள் மற்றும் பிற கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த பா.ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. 

இந்த போராட்டம் இன்று தொடங்குகிறது. இதில், மூத்த தலைவர்கள், கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொள்வர். எனினும் கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மற்றும் கட்சியின் முதலமைச்சர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 

அவர்கள் அடுத்தக்கட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள்.அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.