

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பா.ஜ.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை இன்று காலை கூடியதும், பா.ஜ.க. உறுப்பினர்கள் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பிரச்னை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.
##~~## |
இதே பிரச்னையை மாநிலங்களவையில் பா.ஜ.க.வினர் எழுப்பு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தது.