

புதுடெல்லி: நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க.வினர் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரதமர் இல்லத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2006-2009ஆம் ஆண்டு கால கட்டத்தில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிலக்கரித்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து வந்தார். அப்போதுதான் நிலக்கரி சுரங்க ஊழல் நடைபெற்றது. இந்த ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க.வினர் இன்று அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் அகில இந்திய மாணவர் இயக்கத்தினர், மகளிர் அமைப்பினர், புரட்சிகர இளைஞர் சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
##~~## |