Published:Updated:

கிரானைட் அதிபரிடம் பேரம் பேசினாரா தி.மு.க எம்.எல்.ஏ?

கிரானைட் அதிபரிடம் பேரம் பேசினாரா தி.மு.க எம்.எல்.ஏ?
பிரீமியம் ஸ்டோரி

ன்னியாகுமரியில் தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் கிரானைட் குவாரி உரிமையாளரிடம் பேரம் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கனிம வளக் கொள்ளைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதில், முதல் ஆளாக நிற்பவர் பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மனோ தங்கராஜ். ஆனால், ‘மனோ தங்கராஜின் செயல்பாடுகள் சரியில்லை’ என்று சக நிர்வாகிகளே கடந்த ஆண்டு அறிவாலயத்தில் புகார் கொடுத்திருந்தனர். அப்போது, ‘கல்குவாரிக்கு எதிராக நான் செயல்படுவதாலேயே, கனிம வளத்தைக் கொள்ளையடிப்பவர்களின் தூண்டுதலால், என் மீது புகார் அளித்திருக்கிறார்கள்’ என்று கூறியிருந்தார் மனோ தங்கராஜ். இந்த நிலையில்தான், மனோ தங்கராஜிக்கு இருபது லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதற்காக கிரானைட் அதிபர் மற்றும் சிலர் பேரம் பேசும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகி வைரல் ஆகியிருக்கிறது.

கிரானைட் அதிபரிடம் பேரம் பேசினாரா தி.மு.க எம்.எல்.ஏ?

அந்த வீடியோவில் பேசியிருக்கும் ‘அருளானந்த் கிரானைட்’ நிறுவனத்தின் உரிமையாளர் ஆன்றோவிடம் பேசினோம். “கருங்கல் பகுதியில் நான் ஒரு கிரானைட் மலை வாங்கினேன். அதில் எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் ஆட்கள், வேண்டும் என்றே பிரச்னை செய்கிறார்கள். கிரானைட் மலை சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மைதான். மனோ தங்கராஜின் டிரைவரும் உதவியாளருமான அல்ட்டோ மற்றும் மனோ தங்கராஜின் தம்பி சந்தோஷ் ஆகியோரை ஜோசப் என்பவர் என் வீட்டுக்குக் கூட்டிவந்தார். அப்போது இருவரும் என்னிடம், ‘நாங்கள் இந்த விஷயத்தைப் பேசி முடித்துத் தருகிறோம்’ என்றார்கள். ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தை மிரட்டல் தொனியில் சென்றது. ஆனால், அந்த வீடியோ வெளியானது எப்படி என்று தெரியவில்லை. நான் எந்த வம்புக்கும் போக விரும்பவில்லை. அவர்கள் அரசியல் ரவுடிகள்... நான் அமைதியாகப் போக வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரானைட் அதிபரிடம் பேரம் பேசினாரா தி.மு.க எம்.எல்.ஏ?

ஆன்றோவின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ-வான மனோ தங்கராஜிடம் கேட்டோம். “அந்த வீடியோவை நானும் பார்த்தேன். நான் கிரிமினல் கேஸ் ஃபைல் பண்ணி இவர்களை அரெஸ்ட் பண்ணாம இருந்தா பாருங்க. இன்னும் ரெண்டு நாளில் இது எவ்வளவு பெரிய பிரச்னை ஆகும்னு பாருங்க. என் தம்பி அந்த வீடியோவிலேயே இல்லை. தவிர, என் தம்பிக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. கருங்கல் மலை சம்பந்தமான கேஸ் ஒண்ணு ஐகோர்ட்டில் முடியும் நிலையில இருக்கு. வீடியோவுல அவங்ககூட நிற்கும் ஜோசப்புக்கும் எங்களுக்கும் மலை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. என் பெயரைச் சொல்லி ஒருத்தர் பேசும் அளவுக்கு நான் ஒண்ணும் எடுப்பார் கைப்பிள்ளை இல்லை. என் பி.ஏ ஜஸ்டின் மட்டும்தான். கருங்கல் பகுதியில் உள்ள ஒருவரை வைத்துக்கொண்டு என் பி.ஏ-ன்னு சொன்னால், ஏத்துக்க முடியுமா? என் பிரதிநிதியாக நான் யாரையும் வைக்கிறது கிடையாது” என்றார் கொதிப்புடன்!

- ஆர்.சிந்து, படம்: ரா.ராம்குமார்