‘‘கூவிக்கூவி ஏலம்விடாத குறைதான்... வனத்துறையில் எக்கச்சக்கமாய் லஞ்சம் விளையாடுகிறது. இதே நிலைமை நீடித்தால் சீக்கிரமே தமிழகத்தில் காடுகள் அழிந்துவிடும்’’ என்று கதறுகிறார்கள் வனத்துறையின் நேர்மையான அலுவலர்களும் இயற்கை ஆர்வலர்களும். இதுபற்றி ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட வனத்துறையினர் வட்டாரங்களில் விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய உயர் அதிகாரிகள் சிலர், ‘‘முன்பெல்லாம் ரேஞ்சர், உதவி வனப் பாதுகாவலர் போன்ற பணியிடங்களை அந்தந்தப் பகுதியிலுள்ள டி.எஃப்.ஓ மற்றும் வனப் பாதுகாவலர்களே முடிவு செய்வார்கள். அமைச்சர்கள், ஆளும்கட்சியினர் தரப்பிலிருந்து பரிந்துரையுடன் வருவோர்க்கு முன்னுரிமை தரப்படும். அவ்வளவுதான்... ஆனால், இப்போது அனைத்தையும் அமைச்சர் அலுவலகத் தரப்பினர்தான் முடிவு செய்கிறார்கள். கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வனப் பாதுகாவலர்கள் பணியிட மாறுதலுக்கு 20 முதல் 30 லட்சம் ரூபாய் வசூலிக்கிறார்கள். வனப் பாதுகாவலர்கள் பணியிட மாறுதலுக்கு 20 லட்சம் ரூபாய், மாவட்ட வன அலுவலர் பணியிட மாறுதலுக்கு 10 முதல் 15 லட்சம் ரூபாய், உதவி வனப் பாதுகாவலர் பணியிட மாறுதலுக்கு ஏழு முதல் 10 லட்சம் ரூபாய், வனச் சரக அலுவலர் பணியிட மாறுதலுக்கு ஐந்து முதல் 10 லட்சம் ரூபாய் எனத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சோதனைச்சாவடி பணியிட மாறுதல் என்றால் அதற்குத் தனி ரேட்.

இப்படிப் பணம் கொடுத்து மாறுதல் வாங்கி வருவோர்தான், காட்டைக் காப்பாற்றும் வேலையை விட்டுவிட்டு, காட்டைவைத்து எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கலாம் என்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். முக்கியப் புள்ளியின் வாரிசுகள் இருவரும் வனத்துறையை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டு, பணி இடமாறுதலிலும் ஒப்பந்தப் பணிகளிலும் வசூல்வேட்டை நடத்துகிறார்கள். இவர்களுக்கு வழிகாட்டியாக ஒருவர் இருக்கிறார். அவர் தமிழ்நாடு தோட்டக் கழகத்தில் பணியாற்றியபோது, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பிடிபட்டவர். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

சமீபத்தில் வனத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் ஓர் ஆடியோ பதிவு வலம் வந்தது. அதில் துறையின் முக்கியப் புள்ளி ஒருவர் போனில் பேரம் பேசுகிறார்... ஓர் அதிகாரியிடம் அவர், ‘உங்க இடத்துக்கு நீங்க கொடுத்ததைவிட அதிகமாகக் கொடுத்து ஒருத்தர் கேக்குறாரு. அங்கேயே நீங்க இருக்கணும்னா உடனடியா 20 லட்ச ரூபா கொண்டு வந்து கொடுங்க’ என்று அதில் பேசியிருக்கிறார். அரசின் திட்டப் பணிகளிலும் மேலிடம் 20 சதவிகிதம் கமிஷன் கேட்கிறது. அதிகாரிகள், உள்ளூர் எம்.எல்.ஏ-க்கள், ஆளும்கட்சி நிர்வாகிகள் என மொத்தம் 40 சதவிகிதத் தொகை, கமிஷனாகவே போய்விடுவதால் எந்த ஒப்பந்தப் பணியும் தரமாக நடப்பதில்லை’’ என்று குமுறினார்கள்.

இன்னொரு பக்கம் மேற்குத்தொடர்ச்சி மலை அமைந்துள்ள கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுமானத் துறையினரும் வனத்துறையின் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி நம்மிடம் பேசிய கட்டுமான நிறுவனத்தினர் சிலர், “மலைக்கு அருகில் வனப்பகுதியையொட்டிக் கட்டடங்கள் கட்டுவதற்கு, மலையிடப் பாதுகாப்புக் குழுமத்தில் அனுமதி பெற வேண்டும். இந்தக் குழுமத்தில் வனத்துறை அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

குடியிருப்புகளைத் தவிர்த்து, நான்காயிரம் சதுர அடிப் பரப்பளவுக்கு அதிகமான வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கு, சம்பந்தப்பட்ட இடத்தை வனச் சரக அலுவலர் தொடங்கி மாவட்ட வன அலுவலர், மண்டல வனப் பாதுகாவலர், தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோர் ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் திட்ட அனுமதி வழங்கப்படும். இதற்கு ஏக்கருக்கு 10 லட்ச ரூபாய் வீதம் லஞ்சம் கேட்கிறார்கள்” என்றார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, முதுமலைக்கு வந்திருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்டபோது, ‘‘நான் வனத்துறை அமைச்சர்... ஏதாவது பிரச்னைன்னா பெட்டிஷன் எழுதிக்கொடுங்க’’ என்று பத்திரிகையாளர்களிடம் சீறினார். அதற்குப் பின்பு அவரை போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்தால் பிரசுரிக்கத் தயாராகவுள்ளோம்.

வனத்துறையின் தவறுகளைச் சாதாரண மாகக் கடந்துவிட முடியாது. இந்தத் துறையின் ஊழல்கள் காட்டின் அழிவுக்கு வழிவகுக்கும். தென்னிந்தியாவில் நதிமூலங்கள் காடுகள் மட்டுமே... காடு இல்லாமல் தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாமல் நாம் இல்லை!

- நமது நிருபர்