Published:Updated:

நிலக்கரி ஊழலில் பிரதமர் மீது குற்றச்சாட்டு: நியாயமான விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

விகடன் விமர்சனக்குழு
நிலக்கரி ஊழலில் பிரதமர் மீது குற்றச்சாட்டு: நியாயமான விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
நிலக்கரி ஊழலில் பிரதமர் மீது குற்றச்சாட்டு: நியாயமான விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
நிலக்கரி ஊழலில் பிரதமர் மீது குற்றச்சாட்டு: நியாயமான விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கைதான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என நிலக்கரித்துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இது விஷயத்தில் தனது பொறுப்பிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் தப்பிக்க முடியாது என பா.ஜனதா, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

 நிலக்கரித்துறையை தன் வசம் வைத்திருந்த பிரதமர்தான் முதல் குற்றவாளி, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் அனைத்து முடிவுகளும் அவர்தான் எடுத்தார்.
இதில் தொழிலதிபர் பிர்லாவின் இரு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது அவரது முடிவு. இதில் என்னை மட்டுமே குற்றவாளியாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. நான் குற்றவாளி என்றால் பிரதமரும் குற்றவாளிதான்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பரேக்கின் பேட்டியை சுட்டிக்காட்டி, இவ்விஷயத்தில் வெளிப்படையான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் யஸ்வந்த சின்ஹா," நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமரை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பரேக் கூறியுள்ளது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் காலக்கட்டத்தில் அந்த துறையின் அமைச்சராக மன்மோகன் சிங்தான் இருந்தார். ஒவ்வொரு சுரங்க ஒதுக்கீடும் மன்மோகன் சிங்கின் கையெழுத்துடன்தான் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அனைத்து உண்மைகள் மற்றும் விவரங்களை பரேக் வெளியிட வேண்டும்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் ஒவ்வொன்றின் மீதும் எவ்வாறு முடிவெடுக்கப்பட்டன என்பதையும் அவர் அம்பலப்படுத்தவேண்டும். பரேக் கொஞ்சம்தான் வாய்திறந்துள்ளார். அந்த நேரத்தில் காங்கிரஸ் தலைமையகத்திலிருந்தும், பிரதமர் அலுவலகத்திலிருந்தும் எவ்வாறு குறிப்புகள் வந்தன? அந்த குறிப்புகளின்படி நிலக்கரி சுரங்கங்களை யாருக்கு சாதகமாக ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமர் அலுவலகம், நிலக்கரித் துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தின? என்பது போன்ற விவரங்களை அவர் வெளியிட வேண்டும்" என்றார்.

##~~##
பா.ஜனதா மாநிலங்களவை துணைத் தலைவர் ரவி சங்கர் கூறும்போது," பரேக்கின் பேட்டியில் இருக்கும் உண்மைத்தன்மை மிகவும் கவனத்தில்கொள்ளப்பட வேண்டியதுள்ளதாக இருப்பதால், இது தொடர்பாக பதிலளிக்க வேண்டிய கடமை பிரதமர் அலுவலகத்திற்கும், பிரதமருக்கும் சம அளவில் உள்ளன. எனவே இது தொடர்பாக நியாயமான விசாரணை வேண்டும்" என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில்," பரேக்கின் கூற்றுப்படி நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் 'சதி' செய்தவராக கணக்கில்கொள்ள வேண்டும். ஏனெனில் பிரதமர்தான் அப்போது நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்தார். எனவே யார் என்ன செய்தார்கள்? என்பது குறித்த முழு விவரங்களையும் அறிய விரைவான, விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.