Published:Updated:

2ஜி ஊழல் குறித்த உரையாடல்: உண்மைத் தன்மையை சி.பி.ஐ. ஆராய்கிறது!

விகடன் விமர்சனக்குழு
2ஜி ஊழல் குறித்த உரையாடல்: உண்மைத் தன்மையை சி.பி.ஐ. ஆராய்கிறது!
2ஜி ஊழல் குறித்த உரையாடல்: உண்மைத் தன்மையை சி.பி.ஐ. ஆராய்கிறது!
2ஜி ஊழல் குறித்த உரையாடல்: உண்மைத் தன்மையை சி.பி.ஐ. ஆராய்கிறது!

புதுடெல்லி: 2ஜி ஊழல் தொடர்பான உரையாடல்கள் குறித்த உண்மைத் தன்மையை சி.பி.ஐ. ஆராய உள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் பேசியதாக கூறப்படும் உரையாடல் பதிவுகளை ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாந்த் பூஷன் நேற்று வெளியிட்டார்.

##~~##
இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.யின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ''இந்த உரையாடல்கள் ஊடகங்கள் வாயிலாக சி.பி.ஐ.யின் கவனத்திற்கு வந்துள்ளது.
அந்த உரையாடல் பதிவை பெறவும், அதில் உள்ள பேச்சுகளை எழுத்து வடிவில் தயாரிக்கவும் சி.பி.ஐ. நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உறுதிப்படுத்துவோம்" என்றார்.