Published:Updated:

நிலக்கரி ஊழல்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ- க்கு உத்தரவு!

Vikatan Correspondent
நிலக்கரி  ஊழல்:  விசாரணை  அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ- க்கு உத்தரவு!
நிலக்கரி ஊழல்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ- க்கு உத்தரவு!
நிலக்கரி  ஊழல்:  விசாரணை  அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ- க்கு உத்தரவு!

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் ஜூலை 7 ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு சிபிஐ- க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிஐ, இவ்வழக்கை விசாரித்து வந்தது.

இதனிடையே இவ்வழக்கு தொடர்பான சில கோப்புகள் நிலக்கரித்துறை அமைச்சக அலுவலகத்தில் இருந்து காணமால் போனதாக தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையில் மந்தமாக நடந்துகொள்வதாக சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் ஜூலை 7 ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு சிபிஐ- க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன் ஜூன் 30 ஆம் தேதி வரையிலான அறிக்கையை அமலாக்கத்துறையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.