Published:Updated:

2ஜி ஊழல் வழக்கில் தவறான வாக்குமூலம்: ஷாகித் பல்வாவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

2ஜி வழக்கில், விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தாம் கூறிய பதில்களை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்பது ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வாவின் கோரிக்கை.

ஷாகித் பல்வாவின் மனு விசாரணைக்கு வந்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசிவருவதால் அவரது ஜாமினை ரத்து செய்ய நேரிடும் என நீதிபதி எச்சரித்திருந்தார். இதற்கு மன்னிப்பு கோரிய ஷாகித் பல்வா, தாம் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை என விளக்கமளித்தார்.

இந்த மனு மீது நேற்று உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி ஓ.பி.ஷைனி கூறியிருந்தார். ஆனால், உத்தரவு தயாராகாததால் இன்று மனு மீது உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், தவறாக அளித்த வாக்குமூலத்தை ஷாகித் பல்வா திருத்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், 2ஜி வழக்கில் முரண்பாடான வாக்குமூலம் அளித்ததற்காக ஷாகித் பால்வாவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.