Published:Updated:

கால்நடைத் தீவன ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி லாலு மனு: தீர்ப்பு ஒத்தி வைப்பு!

ஜார்கண்ட்: கால்நடைத் தீவன ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
 
பீகார் முதலமைச்சராக பதவி வகித்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு கால்நடைத் தீவன ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் எதிரொலியாக லாலு பிரசாத் யாதவ் தனது மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார்.

இந்த வழக்கில் தான் குற்றவாளி என அறிவி்க்கப்பட்டுவிட்டதால், மாட்டுத் தீவனம் வாங்கியதில் 950 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தன் மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒரு வழக்கில் குற்றவாளி என அறிவி்க்கப்பட்ட ஒருவரை, அது தொடர்பான மற்றொரு வழக்கில் விசாரிப்பது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என லாலு பிரசாத் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, நீதிபதி ஆர்.ஆர்.பிரசாத் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு