Published:Updated:

`மன்மோகன் சிங்கை ஆதரிக்கும் பிரதமர் மோடியின் சகோதரர்`!

Vikatan Correspondent
`மன்மோகன் சிங்கை ஆதரிக்கும் பிரதமர் மோடியின் சகோதரர்`!
`மன்மோகன் சிங்கை ஆதரிக்கும் பிரதமர் மோடியின் சகோதரர்`!
`மன்மோகன் சிங்கை ஆதரிக்கும் பிரதமர் மோடியின் சகோதரர்`!

ஹர்டோய்:  பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்கிற்கு ஆதரவாக,  பிரதமர் மோடியின் சகோதரர் கருத்து கூறியிருப்பது  பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 8 ஆம் தேதி ஆஜராகும்படி, மன்மோகன் சிங்குக்கு சி.பி.ஐ. தனி நீதிமன்றம்  சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கு மன்மோகன்,  தான் ஒரு அப்பாவி என்றும், என்ன நடந்தது என்பதை நீதிமன்றத்தில் முழுமையாகக் கூறிட உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இப்பிரச்னையில், பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சோம்நாத் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த சோம்நாத் மோடி, செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் ,  ‘‘இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மீது  குற்றம் சாட்டுவதை நியாயப்படுத்த முடியாது. மன்மோகன் சிங் நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் இருந்து பரிசுத்தமானவராக வெளியே வர மனப்பூர்வமாக விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டார்.