Published:Updated:

நில மோசடி புகார்: குஜராத் முதல்வரை பதவி விலக சொல்கிறது காங்கிரஸ்!

Vikatan Correspondent
நில மோசடி புகார்: குஜராத் முதல்வரை பதவி விலக சொல்கிறது காங்கிரஸ்!
நில மோசடி புகார்: குஜராத் முதல்வரை பதவி விலக சொல்கிறது காங்கிரஸ்!
நில மோசடி புகார்: குஜராத் முதல்வரை பதவி விலக சொல்கிறது காங்கிரஸ்!

புதுடெல்லி: குஜராத் முதலமைச்சர் ஆனந்தி பென் படேலின் மகள் மீது நில மோசடி புகார் வந்திருப்பதையொட்டி ஆனந்திபென் பட்டேல் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் ஆனந்திபென் பட்டேல் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மகள் அனார்ஜெஷ் பட்டேல், 'வெய்ல்டு உட்ஸ் ரிசார்ட்ஸ்' மற்றும் 'ரியாலிட்டிஸ்' என்ற நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.

இந்த நிறுவனத்திற்காக குஜராத் அரசு, கிர்காடு பகுதியில் 250 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு ஒதுக்கியதாகவும், இதனால் அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 125 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம், வெறும் 1.5 கோடிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நில மோசடி குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்றும், முதல்வர் ஆனந்தி பென்பட்டேல் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.