Published:Updated:

என் வழக்கை அமலாக்கத்துறை நேர்மையாக விசாரிக்கவில்லை! -விஜய் மல்லையா

என் வழக்கை அமலாக்கத்துறை நேர்மையாக விசாரிக்கவில்லை! -விஜய் மல்லையா
என் வழக்கை அமலாக்கத்துறை நேர்மையாக விசாரிக்கவில்லை! -விஜய் மல்லையா

என் வழக்கை அமலாக்கத்துறை நேர்மையாக விசாரிக்கவில்லை! -விஜய் மல்லையா

புதுடெல்லி: என் மீதான வழக்கை அமலாக்கத்துறை நேர்மையாக விசாரிக்கவில்லை என்று .விஜய் மல்லையா தெரிவித்து உள்ளார்.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, திருப்பி செலுத்தாமல் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார். மேலும், இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை சந்திக்கவும் அவர் மறுத்து விட்டார்.

அவர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் பதிவு செய்துள்ளன. அவருக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்கள் பிடிவாரண்டுகள் பிறப்பித்துள்ளன. அவர் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளதால், அவரை இந்தியாவுக்கு அனுப்புமாறு விடுத்த கோரிக்கையை இங்கிலாந்து அரசும் ஏற்க மறுத்து விட்டது.

மேலும், விஜய் மல்லையாவை கைது செய்து, நாடு கடத்திக் கொண்டு வருவதற்கு ‘ரெட் கார்னர் நோட்டீசு’ (சர்வதேச பிடிவாரண்டு) பிறப்பிக்கக்கோரி இன்டர்போல் என்ற சர்வதேச போலீஸ் உதவியை இந்திய அமலாக்கத்துறை நாடி உள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்று விஜய் மல்லையா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக விஜய் மல்லையா நேற்று விடுத்த அறிக்கையில், ''வங்கி கடன் மோசடி தொடர்பாக என் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவைவிட்டு நான் வெளியேறும்போது எனக்கு எதிராக எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. கைது வாரண்டும் பிறப்பிக்கவில்லை.

அப்படி இருக்கும்போது, கடந்த மார்ச் 2-ம் தேதி வெளிநாட்டுக்கு நான் தப்பி சென்றதாக இந்திய அரசும், ஊடகங்களும் குற்றஞ்சாட்டின. என் மீதான வழக்கை அமலாக்கத்துறை நேர்மையாக விசாரிக்கவில்லை. என்னிடம் விசாரிக்காமலேயே என்னை குற்றவாளியாக சித்தரித்துள்ளனர்.

அமலாக்கத் துறையின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. கடன் பாக்கி தொடர்பாக வங்கிகள் ஒரு குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்" என்று கூறி உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு