Published:Updated:

ஜாமீனுக்கு லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது!

ஜாமீனுக்கு லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது!
ஜாமீனுக்கு லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது!
ஜாமீனுக்கு லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது!

ஹைதராபாத்: ஜாமீன் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி  பட்டாபி ராமராவ் ஆந்திர ஊழல் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டியை,சட்டவிரோத சுரங்க முறைகேடு  வழக்கில் ஜாமீனில் விடுவிப்பதற்கு அவரிடமிருந்து ரூ 6 கோடி லஞ்சம் பெற்றதாக ராவ்  மீது குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து,அவர் இடை நீக்கம் செய்யப்பட்டார். 

இதுதொடர்பாக 3 தினங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.  சோதனையைத் தொடர்ந்து ராமராவ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் உள்பட 2 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.