Published:Updated:

கல்லா கட்டும் கமிஷன் மாஃபியா... சாலைப் பராமரிப்பு டெண்டரில் ஊழல்?

இவர்கள் எந்த ஒப்பந்தப் பணிகளும் செய்யாமல் பெயருக்கு ஒரு கம்பெனியை உருவாக்கி மொத்த தொகையையும் சுருட்டும் மாஃபியா போன்று செயல்படுகிறார்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூரில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் தொடர்பான வழக்கு, தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

இதற்கிடையே, `தஞ்சாவூர் மட்டுமல்ல... பொதுவாகவே மாநிலம் முழுவதும் நல்ல நிலையில் உள்ள சாலைகளுக்கும் `பராமரிப்பு' என்கிற பெயரில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்க அரசு தீவிரம்காட்டுகிறது. இவ்வளவு நிதி நெருக்கடியிலும் கமிஷன் அடிக்கவே இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன' எனப் புகார் கிளம்பியிருக்கிறது.

கல்லா கட்டும் கமிஷன் மாஃபியா... சாலைப் பராமரிப்பு டெண்டரில் ஊழல்?

கொரோனாவைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு போதுமான நிதியைத் தரவில்லை. நிதி நெருக்கடியில் தவிக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்கும்போது, சாலைப் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 5,000 கோடி ரூபாயை கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை களுக்காகச் செலவிடலாம்.

"...மாநிலம் முழுவதும் தொகையை பங்கு பிரித்துக் கொடுப்பதற்காகவே ஒப்பந்ததாரர்கள் போர்வையில் புதுப்புது ஆட்கள் உருவாகியிருக் கிறார்கள். இவர்கள் எந்த ஒப்பந்தப் பணிகளும் செய்யாமல் பெயருக்கு ஒரு கம்பெனியை உருவாக்கி மொத்த தொகையையும் சுருட்டும் மாஃபியா போன்று செயல்படுகிறார்கள். மக்கள் வரிப்பணம் அனைத்தும் கமிஷனாக இவர்கள் கைக்குச் செல்கிறது என்பதுதான் வேதனை'' என்கிறார்.

இதன் முழுமையான பின்னணியை அடுக்கும் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > நல்லா இருக்கும் சாலைக்கு ரூ.5,000 கோடி! - கல்லா கட்டும் கமிஷன் மாஃபியா https://bit.ly/2LlDGis

முதல்வரின் உறவினர்களுக்காக நடக்கிறதா ஊழல்?

கடந்த 10.05.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், 'கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி' என்ற தலைப்பில் கழுகார் விவரித்திருந்த தகவல்கள் இப்போது தமிழகத்தில் கடும் விவாதமாக மாறியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலைப் பராமரிப்புக்கான டெண்டரில் விதிமீறல் நடைபெற்றிருப்பது குறித்தும் அதன் பின்னணி குறித்தும் அதில் விவரித்திருந்தார் கழுகார். இந்தப் பிரச்னை குறித்து நீதிமன்ற படியேறியுள்ள தஞ்சாவூரைச் சேர்ந்த முதல்நிலை ஒப்பந்ததாரர்களிடம் பேசினோம்.

கல்லா கட்டும் கமிஷன் மாஃபியா... சாலைப் பராமரிப்பு டெண்டரில் ஊழல்?

"...இந்தச் சாலைப் பராமரிப்புப் பணிக்கு, 1,947 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பு தயார்செய்து நிதி ஒதுக்கியுள்ளனர். அதாவது ஒரு கிலோமீட்டருக்கு சராசரியாக 2 கோடியே 33 லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கியுள்ளனர். இது மிக மிக அதிகமான தொகை. ஒரு கிலோமீட்டருக்கான பணியை இதுவரை நாங்கள் 1 கோடி ரூபாய் அளவிலேயே செய்துவந்தோம். ஆனால், தற்போது கிலோ மீட்டருக்கு 1 கோடியே 33 லட்சம் ரூபாய் கூடுதலாக ஒதுக்கியுள்ளனர். எங்கள் கணக்குப்படி மொத்த பணிகளுக்குமே சுமார் 833 கோடி ரூபாய்தான் செலவாகும். ஆனால் 1,947 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர்.

இந்த டெண்டரை, முதல்வருடையை உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் பங்குதாரர்களாக உள்ள சென்னை எஸ்.பி.எல் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ், மதுரை ஆர்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ், புதுச்சேரியைச் சேர்ந்த ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்காக அரசு பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுவருகிறது..."

- இதுதொடர்பான முழுமையான செய்திக் கட்டுரையை வாசிக்க > முதல்வரின் உறவினர்களுக்காக நடக்கிறதா ஊழல்? - கொந்தளிக்கும் சாலை ஒப்பந்ததாரர்கள் https://bit.ly/2YYa4Qf

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு