அத்திவரதர் தரிசனம்... அப்பாவி பக்தர்களின் பக்தியைப் பயன்படுத்தி, பல்வேறு தரப்புகளிலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்கிற விவரம் அறிந்தவர்கள் மூலம் கிடைத்த தகவல்கள்: https://bit.ly/2N9AWqt
"இரண்டாவது வாரத்திலிருந்துதான் கூட்டம் அதிகரித்தது. ஆனால், அதற்கேற்ற கழிவறை வசதியோ, குடிநீர் வசதியோகூட ஏற்படுத்தப்படவில்லை. இந்த வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய 29 கோடி ரூபாயில் மாவட்ட நிர்வாகம் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. காஞ்சிபுரம் விடுதிகள் அனைத்தையும் கணக்கிட்டால், மொத்தம் 3,000 அறைகள் இருக்கின்றன. அறை வாடகை 10,000 ரூபாய்க்கு குறைவாக எங்குமே கிடைக்கவில்லை. மூன்று முன்னணி ஜவுளி நிறுவனங்கள்தான் வி.ஐ.பி பாஸ்களை ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்த்தன. '10,000 ரூபாய்க்கு புடவை வாங்கினால், பாஸ் இலவசம்' என்ற மறைமுகச் சலுகையால், இந்த 47 நாளில் மட்டுமே 200 கோடிக்கும் குறையாமல் மூன்று நிறுவனங்களும் லாபம் பார்த்துவிட்டன. தனியார் நிறுவனங்களின்வசம் பாஸ் சென்றது எப்படி?
இதுகுறித்து பலர் புகார் அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நாளைக்கு நான்கு லட்சத்துக்கும் குறையாமல் பக்தர்கள் வந்தனர். வி.ஐ.பி பாஸ் மூலம் மட்டுமே சுமார் 50,000 பேர் தரிசிக்கிறார்கள். இந்த பாஸ்கள், பெரும்பாலும் கள்ளச்சந்தையில் 8,000 ரூபாய்க்குக் குறையாமல் விற்கப்பட்டவை. கணக்குப்போட்டால், தொகை தலைசுற்ற வைக்கிறது.
அத்திவரதர் கழுத்தில் உள்ள மாலைக்கு 20,000 ரூபாய், போட்டோ எடுத்துக்கொள்ள 10,000 ரூபாய் என, எல்லாவற்றிலும் வசூல் வேட்டையாடியதாக குற்றச்சாட்டு
பொது தரிசன வழியைவிட்டால், '50 ரூபாய் சிறப்புக் கட்டண டிக்கெட்' என்று முதலில் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பிறகு விரைவு தரிசன டிக்கெட்டாக மாற்றி, முதலில் 500 பேருக்கும், இறுதியாக 2,000 பேர் வரையிலும் வழங்கினர். நான்கு லட்சம் பேர் கூடும் வைபவத்துக்கு, வெறும் 2,000 பேருக்கு மட்டும் விரைவு தரிசன டிக்கெட் வரைமுறை ஏன் நிர்ணயிக்கப்பட்டது? ஆன்லைன் மூலமாகப் பதியப்படும் இந்த டிக்கெட்டுகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. பொதுதரிசனத்தைவிட்டால், கள்ளச்சந்தையில்தான் பாஸ் வாங்க வேண்டும் என்கிற நிலைமையை, மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே உருவாக்கியது. இதுதான் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு அஸ்திவாரம்.
ஒரு நாளைக்கு பாஸ் விநியோகத்தில் மட்டுமே சுமார் 25 கோடி ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதித்துள்ளனர் என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர். மொத்தம் 47 நாள்களையும் கணக்கிட்டால், 1,175 கோடி ரூபாய் பாஸ் விற்றதிலேயே வருமானம் ஈட்டியுள்ளனர் என்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்ட தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே பணி, வி.ஐ.பி-களை கவனிப்பதுதான். இவர்கள்தான் கொள்ளையடிக்கிறார்கள் என்றால், கோயிலுக்கு உள்ளே சில பட்டர்கள், இந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆட்டம் இன்னும் அதிகம். அத்திவரதருக்கு முன்னே அமரவைப்பதற்கு 50,000 ரூபாய், நிற்பதற்கு 30,000 ரூபாய், அத்திவரதர் கழுத்தில் உள்ள மாலைக்கு 20,000 ரூபாய், போட்டோ எடுத்துக்கொள்ள 10,000 ரூபாய் என, எல்லாவற்றிலும் வசூல் வேட்டையாடியதாக குற்றச்சாட்டு உள்ளது.

"பக்தர்கள் செல்லும் வரிசையில், போதிய அளவில் உண்டியல்கள் வைக்கப்படவில்லை. இதனால், காணிக்கையை பட்டர்கள் வைத்திருக்கும் தட்டில் மட்டுமே செலுத்தும்படி பார்த்துக் கொண்டார்கள். காணிக்கையாக 100 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையில் தாராளமாகச் செலுத்தப்பட்டது. பல பக்தர்கள், நகைகளை வழங்கினர். அவையெல்லாம் பெருமாளுக்குச் சென்றனவா அல்லது பட்டர்களும் அதிகாரிகளும் பங்கு பிரித்துக்கொண்டார்களா?" என்று பொங்கினார் ஒரு நகரவாசி. இதுகுறித்தெல்லாம் விளக்கமறிய, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னய்யாவை தொடர்புகொண்டோம். "சார், அத்திவரதர் வைபவத்தில் பிஸியாக இருப்பதால், இப்போது பேச முடியாது'' என்று அவரது அலுவலகத்திலிருந்து பதில் வந்தது.
> இது தொடர்பாக ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள கவர் ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > அத்திவரதர் தரிசனம் - கண்டவர் ஒரு கோடி... கரப்ஷனோ ஆயிரம் கோடி! https://www.vikatan.com/news/temples/kanchipuram-athi-varadar-temple-corruption
ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/