Published:Updated:

`வீட்டுமனைக்கு அங்கீகாரம் தருகிறேன், ரூ.25,000 கொடுங்கள்!'-சிக்கிய பேரூராட்சி செயல் அலுவலர்

வீட்டுமனை அங்கீகாரம் வழங்க ரூ.25,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலரை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்
கைது செய்யப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் ( எஸ்.தேவராஜன் )

கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் தனது வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி வடலூர் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில், `உங்கள் வீட்டுமனைக்கு அங்கீகாரம் தருகிறேன். 25,000 ரூபாய் கொடுங்கள்' என்று பேரூராட்சி செயல் அலுவலர் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

வடலூர் பேரூராட்சி அலுவலகம்
வடலூர் பேரூராட்சி அலுவலகம்
எஸ்.தேவராஜன்

மோகன்தாஸ் இது குறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் கூறியபடி லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய 25,000 ரூபாய் நோட்டுகளை இன்று பேரூராட்சி செயல் அலுவலர் சக்கரவர்த்தியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரைக் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் அதிகாரிகள் தாறுமாறாக லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துவரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த நடவடிக்கை பொது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Vikatan