Published:Updated:

விதிகளின் `திருத்தம்'... சந்தை விலையைவிட அதிகம்... ரேஷன் கொள்முதலில் ஊழல்?

2013-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பருப்பு டெண்டர் ஒன்றில், அப்போதைய ஒரு கிலோ பருப்பின் சந்தை விலை 43.82 ரூபாயாக இருக்க, அதைவிடவும் குறைவாக 42.9 ரூபாய்க்குத்தான் அரசு டெண்டர் கொடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரேஷன் விநியோகத்துக்கான பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை கொள்முதல் செய்ததில் 1,480 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாகப் புகார் தெரிவித்து அதிரவைத்துள்ளது அறப்போர் இயக்கம். புகார் தொடர்பாக ஏராளமான தகவல்களை இந்த அமைப்பு திரட்டியுள்ளது. ஏற்கெனவே முட்டை, பருப்பு ஊழலில் தொடர்புடைய கிறிஸ்டி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களே இந்த ஊழலிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறது அறப்போர் இயக்கம். அந்த ஆதாரங்களின் சாராம்சத்தில் ஒரு பகுதி...

கிறிஸ்டி நிறுவனம், 2015-ம் ஆண்டுக்கான பருப்பு கொள்முதல் டெண்டரில் முதன்முதலாக இடம்பெறுகிறது. அதற்காக கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சாதகமாக விதிகள் திருத்தப்படுகின்றன. 'டெண்டர் எடுக்கக்கூடிய நிறுவனங்களின் வருடாந்தர வர்த்தகம் மூன்று கோடி ரூபாயாக இருந்தால் போதும்' என்று இருந்ததை '40 கோடி ரூபாயாக இருக்க வேண்டும்' என மாற்றுகின்றனர். இதனால் சிறு நிறுவனங்களால் டெண்டரில் போட்டியிட முடியவில்லை. 'டெண்டரில் பங்குபெறும் நிறுவனம் பருப்பு விநியோகம் செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்' என்ற விதியும் 'பருப்பு / வேறு ஏதேனும் உணவுப் பொருள்களை விநியோகம் செய்திருந்தால் போதும்' என மாற்றப்பட்டது.

ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்

2013-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பருப்பு டெண்டர் ஒன்றில், அப்போதைய ஒரு கிலோ பருப்பின் சந்தை விலை 43.82 ரூபாயாக இருக்க, அதைவிடவும் குறைவாக 42.9 ரூபாய்க்குத்தான் அரசு டெண்டர் கொடுத்துள்ளது. ஆனால், பருப்பு கொள்முதலுக்காக கிறிஸ்டி நிறுவனத்துடன் இறுதியாகப் போடப்பட்ட டெண்டரில் சந்தை விலை 58 ரூபாயாக இருக்க, 86.50 ரூபாய்க்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது சந்தை விலையைவிட 28.50 ரூபாய் அதிகம்.

மொத்தமாக அதிக விலை கொடுத்தால் தெரிந்துவிடும் என்பதற்காக, ஒவ்வொரு டெண்டரிலும் கொஞ்சம் கொஞ்சமாக விலையை ஏற்றியிருக்கிறார்கள். இவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து லட்சம் டன் பருப்பு கொள்முதலில் மட்டும் 870 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. பருப்பு கொள்முதல் டெண்டர்களை ஃபேர் டீல், ஆரோக்யா என்டர்பிரைசஸ், ராசி நியூட்ரி ஃபுட்ஸ் ஆகிய கிறிஸ்டி குழும நிறுவனங்கள் எடுத்துள்ளன. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/3ab5vVb

இது சாம்பிள்தான்.

''இந்த முறைகேட்டில், தமிழ்நாடு பொதுவிநியோகக் கழகத்தின் தலைவரான உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அதன் நிர்வாக இயக்குநர் சுதா தேவி, மத்திய பொதுத்துறை நிறுவன அதிகாரிகள்... எனப் பலரும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அமைச்சர் காமராஜ், சுதா தேவி ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டிருக்காது. இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்யுமாறு சி.பி.ஐ-யிடம் புகார் அளித்துள்ளோம். நீதிமன்றத்தை நாடவும் தயாராக இருக்கிறோம்'' என்றார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.

விதிகளின் `திருத்தம்'... சந்தை விலையைவிட அதிகம்... ரேஷன் கொள்முதலில் ஊழல்?

- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குச் செல்வதற்கும், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறப்பதற்கும் அடிப்படைக் காரணமாக அமைந்த சொத்துக்குவிப்பு வழக்கின் மொத்த மதிப்பே 66.66 கோடி ரூபாய் மட்டுமே! ஆனால் அவருடைய வழித்தோன்றல் களின் ஆட்சியில், ஊழல் என்றாலே நூறு கோடிகளில் தொடங்கும் புகார்கள் ஆயிரம் கோடிகளில்தான் முடிகின்றன.

லேட்டஸ்ட்டாக, ரேஷன் பொருள்கள் கொள்முதலில் நடந்த ஊழலின் ஆதாரங்களை அடுக்கியிருக்கும் புகாரின் முழு விவரத்தையும் அறிய > ரேஷன் பொருள்கள் கொள்முதலில்... ரூ.1,480 கோடி ஊழல்? - அதிரவைக்கும் அறப்போர் இயக்கம் https://www.vikatan.com/news/general-news/rs-1480-crores-scam-in-ration-products-purchases

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

> வீடியோ வடிவில்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு