Published:Updated:

கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய ஊழியர்!

வீட்டுவசதி வாரியம் - பணம் சுருட்டல்
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுவசதி வாரியம் - பணம் சுருட்டல்

விழிபிதுங்கும் மனை ஒதுக்கீடுதாரர்கள்... என்ன செய்யப்போகிறது வீட்டுவசதி வாரியம்?

கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய ஊழியர்!

விழிபிதுங்கும் மனை ஒதுக்கீடுதாரர்கள்... என்ன செய்யப்போகிறது வீட்டுவசதி வாரியம்?

Published:Updated:
வீட்டுவசதி வாரியம் - பணம் சுருட்டல்
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுவசதி வாரியம் - பணம் சுருட்டல்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கே.கே.நகர் மனை ஒதுக்கீடுதாரர்களிடமிருந்து கோடிக்கணக்கில் வசூலிக்கப்பட்ட பணம், வாரியக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட பெண் ஊழியர் ஒருவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்கிறார்கள். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட மனை ஒதுக்கீடுதாரர்கள் மாதம்தோறும் கட்டிய பணம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சென்னை பாடியைச் சேர்ந்த கங்காதரன் என்பவர், “தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கே.கே.நகர் கோட்ட அலுவலகம், சென்னை அசோக் நகரில் செயல்பட்டது. முகப்பேர், அண்ணாநகர், வில்லிவாக்கம், செங்குன்றம் ஆகிய பகுதிகளின் வீட்டுமனை, ஃப்ளாட் விற்பனை இந்த அலுவலகம்மூலமே நடக்கிறது. இங்கு ஊழியராக கல்பனா என்பவர் இருந்தார். இவரிடம்தான் மாதம்தோறும் தவணைப் பணத்தைக் கட்டுவோம். அவர் ரசீது தருவார். கீழ்முதலம்பேடு திட்டத்தில் எனக்கு மனை ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்காக தவணை கட்டிவருகிறேன். ஆரம்பத்தில் சில மாதங்கள் பிரச்னை எதுவுமில்லை. திடீரென ஒரு நாள் ‘கம்ப்யூட்டர் ரிப்பேர்... அடுத்த மாதம் பில் வாங்கிக்கோங்க’ என்று கல்பனா சொன்னார். தொடர்ந்து, ‘அண்ணாநகருக்கு ஆபீஸ் மாறப்போகிறது. அதற்கான வேலைகளில் இருக்கிறோம். அப்புறம் ரசீது வாங்கிக்கோங்க’ என்றார். இப்படியே பல மாதங்கள் சென்றன. எனக்கு பத்து மாதம் பில் வரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திடீரென ஒரு நாள் தவணை கட்டச் சென்றபோது கல்பனாவைக் காணவில்லை. விசாரித்தால், `ரசீது தராமல் வசூலித்த கோடிக் கணக்கான பணத்துடன் அவர் தலைமறைவாகி விட்டார்’ என்றார்கள். வில்லிவாக்கம் சிட்கோ நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட ஆறு திட்டங்களில் மனைகள் இந்தக் கோட்டத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்களில் மனை வாங்கியவர்களும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்” என்றார் கங்காதரன்.

கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய ஊழியர்!

பணத்தை இழந்த அம்பத்தூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், “கல்பனா என்பவர் ஒப்பந்த ஊழியர் என்ற விவரமே, வீட்டுவசதி வாரியத்திலிருந்து அவர்மீது போலீஸில் புகார் அளித்தபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது. ஒப்பந்த ஊழியரை, வீட்டுவசதி வாரிய நிர்வாகம் எப்படி கேஷ் கவுன்டரில் அமரவைக்கலாம்? எனக்கு ஆறு மாத ரசீது வர வேண்டும். வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் செய்தால், ‘ரசீது வாங்காதது உங்கள் தவறு’ என்கிறார்கள். என் பணம் திரும்ப வரவுவைக்கப்படுமா எனத் தெரியவில்லை” என்றார் சோகமாக.

வீட்டுவசதி வாரியத்தின் கே.கே.நகர் கோட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலர் ஒருவர் நம்மிடம், “கீழ்முதலம்பேடு திட்டத்தில் மட்டுமே 85 லட்சம் ரூபாயை கல்பனா கையாடல் செய்துவிட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருபது லட்சம் ரூபாயை மட்டும் அந்தப் பெண்ணிடமிருந்து பறிமுதல் செய்தார்கள். ஒப்பந்த ஊழியராக இருப்பதால் அதிகாரபூர்வமாக அவர்மீது மேல்நடவடிக்கை எடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்ய முடியவில்லை. அந்தப் பெண் சுலபமாக ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். ஆனால், எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அலுவலக நிரந்தர ஊழியர்களின் உதவி இல்லாமல் கல்பனா இப்படி ஒரு முறைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியாது. நேர்மையான அதிகாரிகளை நியமித்து, தீவிரமாக விசாரித்தால், மேலும் சிலர் சிக்குவார்கள். கையாடல் செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் பணத்தை மீட்கவும் வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, `பணமாக யாரும் தவணைத்தொகையைச் செலுத்துக் கூடாது’ என அறிவித்திருக்கிறது வீட்டுவசதி வாரிய நிர்வாகம்.

கே.கே.நகர் கோட்ட அலுவலகத்தின் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரான சுபாஷிடம் இதுகுறித்து கேட்டோம். “தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் கட்டிய பணம் எங்கேயும் போகாது. மனை ஒதுக்கீடுதாரர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை” என்றார்.

- மகிழ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism