டீக்கடை முதல் டிஜிட்டல் இந்தியா வரை... நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் டைம்லைன்

ந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. அப்போது 15 வயதில் மெஹ்சானா ரயில் நிலையத்தில் டீ விற்றுக் கொண்டிருந்த சிறுவனை யாரும் பெரிதாக நினைத்திருக்க மாட்டார்கள். தனது 17வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஹிமாச்சல் மலைப்பகுதிகளை சுற்றி வந்த சிறுவன் யார் என்று அன்று யாரும் உற்று நோக்கி இருக்க மாட்டார்கள். ஆனால் அந்த சிறுவனின் இன்றைய நிலை வேறு. இன்று உலகமே வியக்கும் அளவுக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஆளும் பிரதமராக உருவெடுத்து நிற்கிறார் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி.

பி.ஜே.பியின் தொண்டனாக துவங்கி 34 ஆண்டுகளில் இந்திய பிரதமராக உயர முடியும் என்று மோடியும் சரி மற்றவர்களும் சரி நினைத்து பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.  2012-ம் ஆண்டில் குஜராத் முதல்வராக இருந்த மோடியிடம் பாரதிய ஜனதாக் கட்சி, ''டெல்லிக்கு வரத் தயாராகிறீர்களா?' என்று கேட்டது. இந்தக் கேள்விக்கு 'யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் தரமாட்டேன்'' என்கிறார் மோடி. அவர், குஜராத் முதல்வராவதற்கு பல தலைவர்கள் காரணமாக இருந்தனர். ஆனால், 'இந்தியாவின் பிரதமராக மோடி வருவதற்கு அவர்தான் காரணம்' என்று தன்னைத்தானே வளர்த்துக் கொண்டார்.

141 நாட்கள் வெளிநாட்டில் தங்கி இருந்துள்ளார். 49 நாடுகளுக்கு சென்றுள்ளார் என்று பட்டியல் நீள்கிறது. இந்தியாவில் அதிரடி அறிவிப்புகளால் சில சமயம் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பணமதிப்பிழப்பு, விவசாய பிரச்னை என பதில் கூற முடியாத பிரச்னைகள். இன்னொரு பக்கம் இந்துத்துவா, சாமியார்கள் என மோடியை கீழிறக்கும் விஷயங்கள் வலுவாக உள்ளன.  பல சர்ச்சைகள், வழக்குகளை எல்லாம்  தாண்டி, மூன்று ஆண்டுகாலமாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். பிரதமர் மோடியின் 67 வருட வாழ்க்கைப் பயணம் இதோ...

மோடி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!