முதல்வர் கமல்... அமோக ஆதரவு... ஆனால், களம் காணவேண்டும்! #VikatanSurveyResult | kamal political survey result

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (19/09/2017)

கடைசி தொடர்பு:15:34 (22/09/2017)

முதல்வர் கமல்... அமோக ஆதரவு... ஆனால், களம் காணவேண்டும்! #VikatanSurveyResult

தமிழக அரசியல்குறித்து நடிகர் கமல்ஹாசன் பதிவிடும் கருத்துகள், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 'கேரள முதல்வருடனான சந்திப்பு, விவசாயப் பிரதிநிதிகளைச் சந்திப்பது என முழு நேர அரசியல்வாதியாக மாறிக்கொண்டிருக்கிறார் கமல்' என்ற தகவல்களும் வலம் வருகின்றன. 'தனிக்கட்சி தொடங்குவேன்' எனவும் அவர் பேசியிருக்கிறார். கமல்ஹாசனின் அரசியல் வருகைகுறித்து மக்கள் மத்தியில் உலவும் சில கேள்விகளைத் தொகுத்து வழங்கி இருந்தோம். இதற்கு பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் சர்வேயில் கலந்துகொண்டு வாக்குகளை அளித்திருந்தனர். அதன் முடிவு இங்கே...

1) கமல்ஹாசனின் கோபத்தில் பொதுநலன் இருப்பதாகக் கருதுகிறீர்களா?


2) கமல்ஹாசனின் அரசியல் கருத்துகள் பின்னணியில் யாராவது இருக்கிறார்கள் என்று கருதுகிறீர்களா?

3) கமல்ஹாசனால் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர முடியுமா?


4) ஊழலை ஒழிக்கும்வரை நாம் அனைவரும் அடிமைகளே" என்ற கமலின் கருத்து சரியா?

5) தமிழக அரசியல் தலைவர்கள் மீதான அரசியல் கோபம், தனிப்பட்ட காரணங்களா? உண்மையில் சமூக அக்கறையா?

6) நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தால், ரஜினிக்குப் பின்னடைவா?


7) கமல் அரசியலுக்கு வந்தால் எந்த கட்சியுடன் கூட்டணி சேருவார்?


8) ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர்தான் கமலஹாசன் அரசியல் பேசுகிறார் என்று கருதுகிறீர்களா?


9) கமல் அரசியலுக்கு வந்தால் தனிக் கட்சி தொடங்கலாமா?


10) தமிழக முதல்வராக நடிகர் கமல்ஹாசன்....?

 

எதிர்பார்த்ததைப் போலவே, கமலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு கொட்டிக்கிடக்கிறது. களத்தில் இறங்கி போராடுவது தான் அடுத்த கட்டத்திற்கான பாய்ச்சலாக இருக்கும். காத்திருக்கிறோம்.களம் காணுவாரா‌..‌. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வாரா?!

 


டிரெண்டிங் @ விகடன்