Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு... சாட்சியங்களாக நிற்கும் படங்களும் எழுத்துகளும்! #RussianRevolution

ரசியப் புரட்சி

இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ரசியப்புரட்சியின் மூலம் ஆட்சியில் அமர்ந்தது, லெனினின் தலைமையிலான பொதுவுடைமைக் கட்சி. முதல் உலகப் போர்க்கால பாதிப்புகளுக்கு மத்தியில் உருவான புரட்சிகர அரசாங்கம், லெனின் தலைமையில் அதுவரை உலக நாடுகள் காணாத அரசு முறையையும் சமூக, பொருளாதார மாற்றங்களையும் செய்துகாட்டியது. 

உழைத்து வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் உரிய வேலைக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது;  வேலைக்கேற்ற ஊதியம் உறுதிப்படுத்தப்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பில் சமநிலை பேணப்பட்டது. கல்வி, மருத்துவம், வசிப்பிடம் ஆகியவை அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டன. 
இந்தியாவின் 1947-க்குப் பின்னர் தீட்டப்பட்ட ஐந்தாண்டுத் திட்டமானது, சோவியத் ரசிய அரசாங்கம் கொண்டுவந்ததுதான்! முதல் பிரதமர் நேரு காலத்தைய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான முன்னோடியும் வழிகாட்டியும் சாட்சாத் சோவியத் ரசிய அரசு செயல்படுத்திக் காட்டிய சாதனைத் திட்டங்கள்தான்! இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு மட்டுமின்றி, ஐரோப்பா கண்டத்திலும் அரசின் தன்மைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. 

ரசியப் புரட்சி

கல்வி, சுகாதாரம், குழந்தை நலன், முதியோர் நலன், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை போன்றவற்றை வழங்கிவரும், மக்கள்நலன் அரசு( welfare state) எனும் புதிய அரசியல் வகைமையே தோன்றும்படிச் செய்ததும், ரசியப் புரட்சியின் விளைவே என்கிறார்கள், ஐரோப்பிய அரசியல் வரலாற்றியலாளர்கள்.  
சாதனைப் பக்கங்களைக் கொண்ட ரசியப் புரட்சியின் தொடர்ச்சியாக, இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அந்நாடு கடும் இன்னலைச் சந்திக்க நேரிட்டது. ஆனாலும் விவசாயம், தொழில், இராணுவத் தளவாடம், அறிவியல் தொழில்நுட்பம் என பல துறைகளிலும் சோவியத் ரசியாவின் வளர்ச்சி, இன்றைக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கு முன்னோடியாக நிற்கும் வரலாறாக இருக்கிறது, ரசியப் புரட்சி. 

மனிதகுல வரலாற்றில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம், புதுவகையான சமூக அமைப்பைக் கட்டியமைத்து, பின்னடைவுக்கு உள்ளாகிப்போனாலும், அந்தப் புரட்சியின் மீது உலகம் முழுவதும் இன்றைக்கும் ஓர் ஈர்ப்பு இருக்கத்தான்செய்கிறது. அதன் உயிர்ப்பான சாட்சியங்கள், அதை சாதித்துக்காட்டிய தலைவர்கள் பற்றிய படைப்புகள், ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனத்தோடும் இன்னும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. 

இவற்றில் பிடித்தமான படைப்புகள் பற்றி உடனே சொல்லமுடியுமா என சிலரிடம்  கேட்டபோது, அவர்கள் கூறியது இங்கே:

எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் யமுனா ராஜேந்திரன் (இங்கிலாந்து): 

எழுத்து

கவிதையில் மாயகவ்ஸ்கி, புனைவுகளில் மாக்சிம் கார்க்கி. அண்மையாக வெளியானவற்றில் தாரிக் அலியின் ’தி டைலமாஸ் ஆஃப் லெனின் - டெரரிசம், வார், எம்பயர்’, லவ், ரெவல்யூசன்’, சைனா மெவிலின் ‘அக்டோபர்’, ஸ்லோவாஜ் ஜிசெக்கின் ‘லெனின் 2017’ போன்றவை. 

திரைப்படங்கள்

1. தி அசாசினேசன் ஆஃப் ட்ராட்ஸ்கி- டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு பற்றியது, 2. தி ட்ரெய்ன் - சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்து பின்னர் ரசியாவுக்குச் சென்று புரட்சியை நடத்தியதுவரையான லெனினின் பாத்திரம் குறித்தது, 3. தி ஃபால் ஆஃப் பெர்லின்- இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலினின் பங்களிப்பு பற்றியது, 4. ரெட்ஸ் - ’உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ எழுதிய ஜான்ரீடின் வாழ்க்கை வரலாறு, 5. ஐசன்ஸ்டைன் எடுத்த தொகையான படங்கள் - பேட்டில்ஷிப் பொட்டம்கின், அக்டோபர், ஸ்ட்ரைக்.

’யதார்த்தா’ திரைப்பட இயக்கச் செயற்பாட்டாளர்/ ஓவியர் ஸ்ரீரசா (மதுரை): 

எழுத்து 

1. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் - ஜான் ரீடு, 2. தாய் - மாக்சிம் கார்க்கி, 3. ருஷ்யப் புரட்சி - வி.பி.சிந்தன், 4. ரஷ்யப்புரட்சி - என். ராமகிருஷ்ணன், 5. மாபெரும் சதி, 6. முதல் ஆசிரியர், அன்னை வயல்- ஜிங்கிஸ் ஜத்மாத்தவ், 7. கன்னி நிலம் - மிகையில் ஷோலகவ், 8. வீரம் விளைந்தது - அந்திரேய் ஓஸ்திரோவ்ஸ்கி. 

திரைப்படங்கள்

1. பேட்டில்ஷிப் பொட்டம்கின், ஸ்டிரைக், அக்டோபர் - ஐசன்ஸ்டைன், 2. தி ஃபால் ஆஃப் ரோமனோவ்ஸ் - ஹெர்பெர்ட் ப்ரெனன், 3. தி ஃபால் ஆஃப் ரோமனோவ் டைனாஸ்டி - எஸ்ஃபிர் ஷப், 4. தி லாஸ்ட் கமாண்ட் - ஜோசெஃப் வன் ஸ்டெர்ன்பெர்க், 5. மதர் - புடோவ்கின், 6. எர்த்- அலெக்சாண்டர் தாவ்சென்கோ. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement