``ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆதாரங்கள்... ஆன் தி வே!" - 'தீபா' மாதவன் | 'I am on the serious spree of collecting the witnesses' Madhavan about jayalalithaa death row investigation commission

வெளியிடப்பட்ட நேரம்: 09:38 (16/12/2017)

கடைசி தொடர்பு:10:37 (16/12/2017)

``ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆதாரங்கள்... ஆன் தி வே!" - 'தீபா' மாதவன்

ஆறுமுக சாமி   ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் கமிஷன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு. இதனைத்தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுவரை அந்தக் கமிஷனிடம் தீபா, மற்றும் அவருடைய கணவர் மாதவன் உள்ளிட்ட 26 பேர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதில் விசாரணைத் தொடங்கிய முதல் நாளிலேயே தி.மு.க மருத்துவர் அணியைச் சேர்ந்த சரவணன் ஆஜராகினார்.

இதுகுறித்துப் பேசிய சரவணன், ‘தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிப்பதற்கு முன்பாக எடுத்துக்கொண்ட, சிகிச்சைக் குறித்து விசாரிக்க வேண்டும். எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமச்சந்திர மருத்துவமனையிலும், எம்.வி.ஸ்கேன் சென்டரிலும் ஜெயலலிதா சர்க்கரைநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கேள்விப்பட்டோம். அந்தth தகவலை கமிஷனிடம் தெரிவித்துள்ளேன்.

மேலும் சசிகலாவின் உறவினர் சிவக்குமாரும் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதனால் அவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம். முதல்வருக்கு என தனியாக மருத்துவர், மற்றும் ஆம்புலன்ஸ் சேவை இருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா மயக்க நிலைக்கு போனபோது அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதன்பின்னர் எடுத்துச் சென்றுள்ளனர். அப்போலோவில் இருந்து கொண்டுவரப்பட்டபோது அங்குள்ள சி.சி.டி.வி கேமிராக்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை ஆராய வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன்.

மருத்துவமனையில் இருந்த நாட்களில் சுய நினைவுக்கு வந்ததாக அமைச்சர்கள் பேட்டி அளித்து வந்தனர். எந்த அடிப்படையில் அவர்கள் அவ்வாறு கூறினார்கள். அவர்கள் நேரில் ஜெயலலிதாவை பார்த்தார்களா என்பது குறித்து அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தேன். ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டபோது 99 சதவிகிதம் அவர் மயக்க நிலையில் இருந்தற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

அப்படி இருக்கின்ற சூழலில் செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாள் ஆளுநருக்கு அவர் கடிதம்சரவணன்  திமுக எழுதியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்புலன்சில் வந்தவர், மயக்க நிலையில் இருந்தவர் அடுத்த நாளே கடிதம் எழுதவாரா? இப்படி  பல விஷயங்களில் முரண்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. இதையும் நீதிபதியிடம் தெரித்துள்ளேன். ஜெயலலிதா இறப்பதற்கு  ஓரிரு நாட்களுக்கு முன்பாக, ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டதாகவும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்கள். எக்மோ கருவி என்பது தியரிட்டிக்கலானதே தவிர, பிராக்டிக்கலாக முடியாத விஷயம். இந்தத் தகவல்களையும் பதிவு செய்துள்ளேன். நான் கூறிய தகவல்களை கேட்டுக்கொண்ட நீதிபதி தேவைபடும்போது மீண்டும் அழைக்கிறேன் என்றுதெரிவித்தார்.

இந்தக் கமிஷன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தற்போது விசாரிக்கப்பட்டவர்கள் அனைவருமே இந்த விவகாரத்தில் தொடர்பில்லாவர்கள். விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ள தீபா, மாதவனும் உண்மையை கண்டுபிக்க கோரும் நபர்கள்  மட்டுமே.தற்போது விசாரிக்கப்பட்டவர்களில் ஜெயலலிதாவின் மருத்துவர் பாலாஜி மட்டுமே இதற்கு தொடர்புடையவராக உள்ளார். அமைச்சர்கள்,டெல்லி மருத்துவர்கள்,லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெய்லி போன்றோரை இந்தக் கமிஷன் அழைக்குமா? என்பது தெரியவில்லை. நாட்கள் கடந்துகொண்டே போகிறது.கடைசி நேரத்தில் விசாரணை முடித்துவிடவும் வாய்ப்புள்ளது .அதனால் இந்த கமிஷன்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’’ என்றார்.

மாதவன்அவரைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஜரான தீபாவின் கணவர் மாதவனிடம் பேசியபோது,’முதல்வருக்கு உடல் நலக்குறைவு  ஏற்பட்ட போது, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது போயஸ் கார்டன் மற்றும் அந்தத் தெருக்களில் ஏராளமான கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த கேமிராக்கள் ஆய்வுசெய்ய வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு ‘அனைவருமே இதையேதான் சொல்கிறார்கள். நீங்களும் இதையேத்தான் தெரிவிக்கிறீர்கள்’ என்றார் நீதிபதி. அதற்கு நான் பதிலளிக்கையில், வெறும் தகவல்களை பெறுவதோடு மட்டும் நின்றுவிடாமல் கேமிராக்களை ஆய்வுசெய்யும் பணியைத் தொடருமாறு வலியுறுத்தி உள்ளேன். மேலும் கேமிராக்கள் வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள். அவரை ஐ.சி.யு.-வில் சேர்ப்பதற்காகவே திட்டமிட்டு கேமிராக்கள் செயலிழக்க வைக்கப்பட்டதா? போன்றவற்றை விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பத்தை முழு விசாரணை வளையத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தேன்.அவருடைய மரணத்துக்கு யார் காரணம் என்பது குறித்து சில தகவல்களை பெற்றுள்ளேன். போயஸ் கார்டனில் இருந்தவர்கள் என்னுடன்  சிலர் பேசி வருகிறார்கள்.அவர்களிடம் ஆதாரங்களை கொடுக்குமாறு கேட்டுள்ளேன்.அந்த ஆதராங்கள் கிடைத்தால் அவற்றை கமிஷனிடம் கொடுக்க மாட்டேன். ஊடகங்கள் முன்பு சமர்ப்பிப்பேன். ஜெயலலிதா மரணத்துக்கான காரணத்தை கூறும் அந்த நபர்கள் குறித்த பெயரைத் தெரிவிக்க மாட்டேன். அவ்வாறு  வெளிப்படையாக  தெரிவித்தால் பயந்துகொண்டு கொடுக்க வேண்டிய தகவல்களையும், ஆதாரங்களையும் கொடுக்க மாட்டார்கள். அதன் காரணமாகவே அமைதி காத்து வருகிறேன். எனவே, தற்போது ஆதாரங்களைச் சேகரிக்கும் வேலையில் தீவிரமாக  இறங்கியுள்ளேன். விரைவில் அந்த ஆதாரம் எனக்கு கிடைக்கும் நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.


டிரெண்டிங் @ விகடன்