புத்தாண்டுக் கொண்டாட்டம்! போதை பார்ட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை... உடனே ஷேர் செய்யுங்கள்... அவசரம்! | Accidents due to drunkards on new year

வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (29/12/2017)

கடைசி தொடர்பு:20:53 (29/12/2017)

புத்தாண்டுக் கொண்டாட்டம்! போதை பார்ட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை... உடனே ஷேர் செய்யுங்கள்... அவசரம்!

புத்தாண்டு என்றாலே பெரும்பாலானவர்களுக்கு போதை என்பதுதான் வழக்கமாக இருக்கிறது. விடியவிடியக் குடித்துக் கொண்டும், வீதிதோறும் வாகனங்களை விர்ர்ர்ர்ர்ரும் என்று அலறவிட்டுக் கொண்டும் புத்தாண்டைக் கொண்டாடுவதுதான் இந்தப் பார்ட்டிகளின் வழக்கம். இதன் காரணமாக, வழக்கம்போல வீதிகளில் தங்களின் வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்களும், புத்தாண்டு நேரத்தில் வீதிகளில் சந்தோஷமாக நடைபோடுபவர்களும் இந்த போதை பார்ட்டிகளின் தடுமாற்றத்தால் விபத்துகளில் சிக்கி, படுகாயம் தொடங்கி, பரிதாபமாக உயிரை விடுவது வரை நடக்கிறது.

புத்தாண்டின்போது பைக் ரேஸ் நடத்தினால், பாஸ்போர்ட் எடுப்பதில் சிக்கல் வரும் என்று இந்த வருடம் மிரட்டியிருக்கிறது தமிழகக் காவல்துறை. ஆனாலும் நம்ம போதைப் பார்ட்டிகள் கேட்பார்களா? அதைக் கேட்காவிட்டாலும் பரவாயில்லை, கடந்த ஆண்டுகளில் புத்தாண்டிபோது சென்னை மாநகரில் மட்டும் நடந்த விபத்துப் பட்டியலை ஒரு பார்வை பார்த்துக்கொண்டார்கள் என்றால், கொலைபாதக ரேஸ்களில் இறங்க மாட்டார்கள் என்று நம்பலாம்.

இது சென்னையின் கணக்கு. ஆண்டுதோறும் புத்தாண்டு நாளில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைகிறார்கள். 5 பேர் உயிரிழக்கிறார்கள். இந்த ஆண்டு இந்தப் பட்டியலில் உங்கள் உடன்பிறப்புக்கள், நண்பர்கள், சொந்த பந்தங்கள் என்று யாரும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் இந்தச் செய்தியை உடனே ஷேர் செய்யுங்கள். அவசரம்!

புத்தாண்டு போதை

....


டிரெண்டிங் @ விகடன்