பிரமாண்டமேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி! | Vikatan cinema awards function kick starts in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (13/01/2018)

கடைசி தொடர்பு:20:49 (13/01/2018)

பிரமாண்டமேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி!

கடந்த 2017-ம் ஆண்டில் சாதித்த சினிமாக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விகடனின் சினிமா விருதுகள் நிகழ்ச்சி பிரமாண்டமாய் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் தொடங்கியது. 

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் சாதிக்கும் கலைஞர்களை ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கௌரவித்து வருகிறான் விகடன். அந்தவகையில் கடந்த 2017-ம் ஆண்டுக்கான விகடன் விருது 30-க்கும் மேற்பட்ட துறைகளில் வழங்கப்படுகிறது. இசைஞானி இளையராஜாவுக்கு எஸ்.எஸ்.வாசன் விருது, ’மெர்சல்’ காட்டிய விஜய் சிறந்த நடிகராகவும் , ’அறம்’ பேசிய நயன்தாரா சிறந்த நடிகையாகவும், விமர்சகர்களின் ஒட்டுமொத்த பாராட்டை அள்ளிக்குவித்த ’அருவி’  சிறந்த தயாரிப்பு என பல்வேறு துறைகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாய் தொடங்கியது.

இன்று நடைபெறும் நிகழ்ச்சியின் பிரத்யேக படங்கள் மற்றும் வீடியோ. 
 

 

 

 

 

விருதுவிழாவுக்கு வருகை தரும் நட்சத்திரங்கள்...


[X] Close

[X] Close