சாதனை மனிதர்களைக் கௌரவிக்கும் ஆனந்த விகடனின் `நம்பிக்கை விருதுகள் - 2017’ | Ananda Vikatan Nambikkai award function kick starts in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (19/01/2018)

கடைசி தொடர்பு:19:51 (19/01/2018)

சாதனை மனிதர்களைக் கௌரவிக்கும் ஆனந்த விகடனின் `நம்பிக்கை விருதுகள் - 2017’

பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த மனிதர்களைக் கொண்டாடும் விதமாக, 'ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்' என்ற பெயரில் விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. 


அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. நம்பிக்கை விருதுகளில், நாடகக் கலைக்கு அளித்த பங்களிப்புக்காக ந.முத்துசாமிக்கு, `பெருந்தமிழர்’ விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சிறந்த கவிதைத் தொகுப்பாக, யவனிகா ஸ்ரீராமின் ’அலெக்ஸாண்டரின் காலனி’ மற்றும் சிறந்த கட்டுரைத் தொகுப்பாக, சுகுணா திவாகர் எழுதிய ’சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை’ ஆகியவை தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அதேபோல, சிறந்த டி.வி நிகழ்ச்சியாக, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியும், சிறந்த டி.வி சேனலாக புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக, நியூஸ் 18 தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.