Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

”4 மணிக்கு ஒலித்த வானொலி...பதப்படுத்தப்பட்ட லெனின் உடல்!”லெனின்ரு மனிதனுக்கு உலகமே எழுந்து நின்று இறுதி மரியாதை செய்தது என்றால் அது புரட்சியாளன் லெனினுக்கு மட்டுமே. ஆம், ஜனவரி 27, 1924 அன்று  சோகம் நிறைந்த கண்களோடும், சிவப்பு கொடிகளை கையில் ஏந்தி தொழிலாளர்கள் ஊர்வலமாக செல்ல, சோவியத் ரசியாவின் மயான அமைதி உலகின் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அது இவ்வுலகில் புரட்சியாளன் லெனின் இறுதி நாள்.

கடும் குளிர் உடலை வாட்ட, லெனின் மரணம் மனதை வாட்ட சரியாக 4 மணியளவில் வானொலி அறிவிப்பாக ”எழுந்து நில்லுங்கள் தோழர்களே! லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்” என்று வர உலகமே எழுந்து நின்று 5 நிமிட மௌன அஞ்சலியை லெனினுக்கு செலுத்தியது. உலகத்தில் எந்த தலைவருக்கும் கிடைக்காத இந்த மரியாதை லெனினுக்கு கிடைக்க காரணம் அவரது விடுதலை புரட்சி தொடக்கம் மட்டுமே!

ஏழைகளின் உழைப்பை தன் இலாப சம்பாத்தியத்திற்கு பயன்படுத்திய முதலாளிகள் ஒரு புறம், வறுமையில் அவர்களை சித்திரவதை செய்த அரசு என்று ரசியாவில் துன்ப வாழ்க்கை வாழ்ந்த மக்களுக்கு விடியலாக கிடைத்தவர் லெனின்.

ரசியாவின் சிம்பெர்ஸ்க் என்ற நகரில் 1870, ஏப்ரல் 22அன்று இல்யா உல்யனவ், மரியா உல்யனவ் ஆகியோருக்கு விளாமிடிர் உல்யானவாக பிறந்தவர் தான் லெனின். கல்வி அதிகாரியின் மகன் என்பதால் அறிவுடையவராக திகழ்ந்தார். தந்தையிடம் நியாத்தையும், தாயிடம் நீதி கதைகளையும், அண்ணன் அலெக்சாண்டரிடம் அறிவியலையும் கற்றார்.

அறிவில் சிறந்து விளங்கிய லெனினுக்கு முதல் இழப்பு தந்தையின் மரணம். அதிலிருந்து மீளுவதற்குள் அரசை எதிர்த்ததாக குற்றச்சாட்டு செய்யப்பட்டு அண்ணனுக்கு மரண தண்டனை என அடுத்தடுத்த இழப்பு அவரை சோகத்தில் ஆழ்த்தினாலும், புரட்சிக்கு வித்தாக்கியது.

கொடுங்கோல் ஆட்சி செய்த ஜார் மன்னனை எதிர்க்க முடிவு செய்தார் லெனின். உயர் கல்வி மட்டும் போதாது, தொழிலாளார்களை காப்பாற்ற சட்டம் அவசியம் என சட்டக்கல்லூரியில் சேர முடிவு செய்த போது அவரை சேர்க்க மறுக்கப்படுகிறது. வீட்டில் இருந்தே சட்டம் பயின்று, முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறார். பின், பெத்ரோகோட் என்ற நகரில் ஏழைத் தொழிலாளார்களுக்கு இலவசமாக வழக்கு நடத்தினார். தொழிலாளார்களை ஒன்று சேர்ப்பதின் மூலமே ஜார் மன்னனின் ஆட்சியை கவிழ்க்க முடிவும் என்றும் தீர்மானித்தார்.

காரல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் ஆகியோரின் நூல்களை படித்து உழைக்கும் மக்கள் எப்படிபட்ட புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்கத்தையும், அரசையும் எதிர்க்க முடியும் என்று கற்றுக் கொண்டார். புரட்சியை தொடங்கி கம்யூனிஸவாதியானார் லெனின்.

இரவு நேரங்களில் தொழிலாளார்களின் இடங்களுக்கு சென்று அவர்கள் அந்நிலையில் இருக்க என்ன காரணம். அதை மாற்ற என்ன தீர்வு என்று புரட்சியை வித்திட்டார். இதனால் 1895ல் கைதும் செய்யப்பட்டு, காதலித்து திருமணம் செய்த கிர்ப்ஸ்காயாவுடன் சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு புத்தகம் எழுதினார். புது கம்யூனிச கட்சியையும், பத்திரிக்கையையும் தொடங்க முடிவு எடுத்தார்.

1899ல் விடுதலை செய்யப்பட்டவுடன் ஜெர்மனிக்கு தப்பித்து சென்று அங்கு இஸ்காரா என்னும் முதல் கம்யூனிச பத்திரிக்கையை தொடங்கினார். அதன் மூலம் தொழிலாளர்களிடம் பேசினார். 1905ல் மன்னனின் ஒடுக்கு முறை அதிகமாக தொழிலாளார்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சுட்டும் கொல்லப்பட்டனர். படுதோல்விகள், கம்யூனிச அழிப்பு என்று தொடர்ந்தது.

அரசுக்காக போரில பங்கு கொண்டு ஏழை நாடுகள் மீது போரிட்டு உயிர் நீத்தும் படை வீரர்களை ஆளும் அரசுக்கு எதிராக போரிட்டு உனக்கான உரிமையை பெறு என்ற வார்த்தை அடிபட்டு திருந்திய பின் அவர்களின் மண்டையில் ஏறியது. 1917, பிப்ரவரியில் புரட்சி வெடித்தது. மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது.

மன்னரிடம் இருந்து முதலாளிகளின் கையில் ஏறிய அரசை நவம்பர் மாதம் 7ம் தேதி பெத்ரோகிராட்டில் ஆயுதங்களுடன் தொழிலாளர்கள் அணிவகுத்து அரசு அலுவலகங்களை கைப்பற்றினர். உலகின் முதல் தொழிலாளர்கள் ஆட்சி அமைந்து சோசலிச ரசியாவானது.

வாழும் பூமியிலேயே சொர்க்கத்தை நிலைநாட்டும் சோசலிசத்தை ரசியாவில் கொண்டு வந்த லெனின் உலக அரங்கில் அறியப்பட்டார். லெனின் பாதையே வெற்றி பாதை என பல்வேறு நாடுகள் பின்பற்ற அவர்களின் வெற்றியை காணும் முன் 1924ம் ஆண்டு ஜனவரி 21ல் மரணமடைந்தார் லெனின்.

உலத்தில் யாருக்கும் இல்லாத தனிச்சிறப்பாக லெனினுக்கு பல்வேறு நாடு எழுந்து நின்று விடை கொடுத்தது. அந்த விடை லெனினுக்கு மட்டுமே அன்றி புரட்சிக்கு இல்லை. விளாதிமிர் என்பதற்கு உலகை ஆள்பவர் என்று பொருள். அது போலவே இன்றும் மக்களின் மனதை ஆளுகிறார் லெனின்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement