Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஸ்டார் ஹோட்டல் மெனு... கல்யாண பிரியாணி... கறி வகைகள்.. காபி! கலெக்டர் மாநாட்டுச் செலவு 33 லட்சம்!

கலெக்டர் மாநாடு

ஒவ்வோர் ஆண்டும் முதல்வர் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். சட்டம் - ஒழுங்குப் பிரச்னை, மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடு ஆகியவை பற்றி பேசுவதற்காகத்தான் கலெக்டர் மாநாடுகள் கூட்டப்படுகின்றன.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கலெக்டர்கள் - போலீஸ் அதிகாரிகள் மாநாடு இன்று முதல் 7-ம் தேதி வரையில் சென்னையில் நடைபெறுகிறது.

கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 11, 12, 13-ம் தேதிகளில் கலெக்டர் மாநாடு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பு 2012-ம் ஆண்டு டிசம்பர் 17, 18 மற்றும் 19 தேதிகளில் மாநாடு நடைபெற்றன.

2012-ம் ஆண்டு நடைபெற்ற கலெக்டர் மாநாட்டுக்கு ஆன செலவுகளைப் பற்றி விசாரித்தோம். மாநாட்டுக்கு ஃபிளக்ஸ், பூக்கள் டெக்கரேஷன், சோபா ஆகியவற்றுக்காக 1.08 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் அரங்கத்தில் தடையில்லாமல் மின்சாரம் கிடைப்பதற்காக ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்தது பொதுப்பணித் துறை. இதற்காக 1.54 லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளது. மாநாடு தொடங்குவதற்கு முந்தைய தினம், ஏற்பாட்டு பணிகளைச் செய்தற்காக சிற்றுண்டிக்கு மட்டும் 1.02 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

'மாநாட்டை எப்படியெல்லாம் சிறப்பாக நடத்தலாம்' எனத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் 12.11.2012-ம் தேதி தலைமைச் செயலாளர் கான்ஃபரன்ஸ் ஹாலில் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கான சிற்றுண்டி செலவு சுமார் 8 ஆயிரம் ரூபாய்.

மாநாடு நடைபெற்ற மூன்று நாள்களுக்கும் அங்கே சட்டமன்ற மற்றும் போலீஸ் துறை பணியாளர்களுக்கு ஆறு வேளை காபி, ஸ்நாக்ஸ் தமிழ்நாடு சுற்றுலா வளச்சிக் கழக ஹோட்டலிலிருந்து வழங்கப்பட்டது. இந்த சிற்றுண்டி செலவுக்கு மட்டும் 66 ஆயிரம் ரூபாய் செலவு. மூன்று நாள்களுக்கு வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்ட வகையில் நாலாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் மாநாடு

மாநாட்டு ஏற்பாடுகளை பொதுத் துறைதான் செய்தது. அந்தத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வசந்த பவன், சங்கீதா, பாரத் ஆகிய ஹோட்டல்களிலிருந்து சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதற்காக 70 ஆயிரம் ரூபாய் செலவானது.

அழைப்பிதழ்கள், முதல்வரின் உரைகள், ப்ரௌச்சர், அறிக்கைகள், நோட்பேடு, பிரின்டிங் ஆகியவற்றுக்காக 72 ஆயிரம் தரப்பட்டுள்ளது.

மூன்று நாள்களுக்கும் கம்ப்யூட்டர் மற்றும் அது தொடர்பான பணிகளை அரசின் எல்காட் நிறுவனம் செய்திருந்தது. அதற்காக 1.29 லட்சம் செலவிடப்பட்டுள்ளது,

மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குப் பயணப்படியாக 1.43 லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளது. இப்படியான செலவுகளுக்கு மட்டும் மொத்தமாக 8 லட்சத்து 60 ஆயிரம் செலவிட்டிருக்கிறார்கள்.

இதுதவிர உணவு செலவு தனியாகச் செய்யப்பட்டுள்ளது. அதையும் பார்ப்போம். ஸ்டார் ஹோட்டலான தாஜ் கோரமண்டலிலிருந்து உணவுகள் வரவழைக்கப்பட்டு ஃபவே முறையில் தரப்பட்டுள்ளது. முதல் நாள் 8.85 லட்சம் ரூபாய்க்கும் இரண்டாவது நாள் 6.30 லட்சம் ரூபாய்க்கும் மூன்றாவது நாளுக்கு 6.30 லட்சம் ரூபாய்க்கும் உணவுகள் வாங்கியிருக்கிறார்கள். மூன்று நாள்கக்கும் சேர்த்து தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்கு தரப்பட்ட தொகை 21.46 லட்சம் ரூபாய். வசந்தபவன் ஹோட்டலிலிருந்து 12--ம் தேதி வாங்கப்பட்ட உணவுக்கு 57 ஆயிரம் ரூபாயும் சேலம் கல்யாணி பிரியாணி ஹோட்டலிலிருந்து மூன்று நாள்களுக்கும் உணவு வாங்கப்பட்ட வகையில் 2.57 லட்சம் ரூபாயும் வழங்கியிருக்கிறார்கள். இந்த மூன்று ஹோட்டல்களுக்கும் அளிக்கப்பட்ட மொத்த தொகை 24.61 லட்சம் ரூபாய்.

இந்தச் செலவுகள் அனைத்தும் 2012-ம் ஆண்டு செய்யப்பட்டவை. இப்போது நடைபெற உள்ள மாநாட்டுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் செலவாகுமாம்.

எல்லாம் சரி, சட்டம் ஒழுங்குப் பிரச்னையையும் கொஞ்சம் பாருங்க.

கலெக்டர் மாநாடு

கலெக்டர் மாநாடு....

என்னென்ன செலவுகள்!

1. ஃப்ளக்ஸ், பேனர், பூக்கள் டெக்கரேஷன், சோபா - 1,08,547

2. ஜெனரேட்டர் - 1,54,000

3. மாநாட்டுக்கு முந்தைய சிற்றுண்டி - 1,02,432

4. மாநாட்டு ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கான சிற்றுண்டி - 7,980

5. மாநாட்டுப் பணியாளர்களுக்குச் சிற்றுண்டி - 66,665

6. வாட்டர் பாட்டில்கள் - 4,092

7. பொதுத் துறை ஊழியர்களுக்குச் சிற்றுண்டி - 70,334

8. அழைப்பிதழ்கள், அறிக்கைகள், நோட்பேடு, பிரின்டிங் - 72,660

9. கம்ப்யூட்டர் பணிகள் - 1,29,505

10. பயணப்படி - 1,43,781

11. ஹோட்டல் உணவு - 24,61401

மொத்தம் - 33,21,497

உணவு செலவுகள்!

தாஜ் ஹோட்டல் - 21,46,099

வசந்த பவன் - 57,600

சேலம் கல்யாண பிரியாணி - 2,57,700

மொத்தம் - 24,61,401

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement