Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் நோட்டுகளை விழுங்கும் பணம் எண்ணும் மெஷின்... வைரல் வீடியோ உண்மையா?

டந்த சில தினங்களாக வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் முதலில் ஒரு மனிதர் தன் கையில் வைத்திருக்கும் சீன கரன்ஸிகளை நம்மிடம் காட்டுகிறார். அவற்றைப் பணம் எண்ணும் மெஷின் ஒன்றினுள்ளே வைக்கிறார். அது அவற்றை எண்ணிவிட்டு வெளியே துப்புகிறது. 40 நோட்டுகள் இருப்பதாக அந்த மெஷினின் டிஸ்ப்ளே நமக்குச் சொல்கிறது. மீண்டும் ஒருமுறை பரிசோதிக்கிறார். அதே 40. இப்போது டிவிடி ப்ளேயரின் ரிமோட் போல இருக்கும் சின்ன ரிமோட் ஒன்றில் சில பட்டன்களை அழுத்துகிறார். பின்னர், மீண்டும் அதே கரன்ஸி நோட்டுகள் மெஷினின் உள்ளே செலுத்தப்படுகின்றன. எல்லா நோட்டுகளையும் எண்ணிவிட்டு அந்த மெஷின் 40 நோட்டுகளுக்குப் பதிலாக 30 நோட்டுகள்தான் உள்ளன என்று டிஸ்ப்ளேயில் காட்டுகிறது. 

மீண்டும் ரிமோட்டில் பட்டனைத் தட்டுகிறார். பணத்தை மெஷினில் வைக்கிறார். இப்போது 24 நோட்டுகள் மட்டுமே உள்ளதாகக் காட்டுகிறது. இப்படியே பணம் 22, 18, 16, 13, 12, 11 மற்றும் 10 நோட்டுகள் எனக் குறைந்துகொண்டே போகிறது. ஒருவேளை மெஷின் பிரச்னையோ என்று நினைக்கும் முன், அவர் பணத்தைக் கையில் எண்ணுகிறார். மெஷின் காட்டியதுபோல வெறும் 10 நோட்டுகள்தான் இருக்கின்றன. உடனே அந்த மெஷின் அடியில் உள்ள ஒரு ரகசிய அறையைத் திறந்து காட்டுகிறார், உள்ளே, அந்த காணாமல்போன அந்த 30 நோட்டுகளும் இருக்கின்றன. எவ்வளவு நோட்டுகளைத் திருட வேண்டுமோ, அந்த எண்ணை ரிமோட்டில் தட்டினால் அந்த அளவு நோட்டுகள் மெஷினின் ரகசிய அறைக்குச் சென்றுவிடும். ரூபாய் குறைவாக இருக்கிறது என்று எண்ணுபவர் கூறினால், நாமும் நம்பிக் கூடுதல் நோட்டுகளை எடுத்துக் கொடுத்துத்தானே ஆக வேண்டும்? அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த வீடியோவை அனுப்பி, நகைக் கடைகளில் இருந்து வங்கிகள் வரை ரூபாய் எண்ணும் மெஷின்கள் பயன்படுத்தப்படும் அனைத்து இடங்களிலும் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர்.

இது எந்த அளவுக்கு உண்மை? இப்படியெல்லாம் செய்ய முடியுமா? விடை காண அந்த வீடியோ குறித்து ஆன்லைனில் ஆராய்ந்தோம். கிட்டத்தட்ட, 2015-ம் ஆண்டில் இருந்து இந்த வீடியோ புழக்கத்தில் இருக்கிறது. எதிர்பார்க்கப்பட்டது போலவே, சீனாக்காரர்கள்தான் அந்த வீடியோவை எடுத்திருக்கிறார்கள். அப்போதே ஹாங்காங்கின் பிரபல நாளேடான 'ஆப்பிள் டெய்லி' இதுகுறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம் என விளக்கியிருக்கிறது. அதன்படி, ரூபாய் நோட்டுகளை எண்ணும் மெஷினின் சென்சாரை குறிப்பிட்ட நொடிகள் செயல்படாமல் வைப்பதன் மூலம் ரூபாய் நோட்டுகள் குறைவாக இருப்பதாகக் காட்டலாம் என்று தெரிவித்துள்ளது. மீதமாகும் பணத்தை உள்ளே பதுக்கும் வசதியை வேண்டுமானால் நிச்சயம் உருவாக்க முடியும் என்று தெரிவித்தது.

பணம்

ஆனால், இப்படியெல்லாம் சீனாவில் நடக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதுதான் பதிலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுவரை அப்படியொரு மோசடி எங்கும் நடந்ததாகப் புகார்கள் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. தற்போது அந்தப் பழைய வீடியோவே இங்கும் வாட்ஸ்அப்பில் பகிரப்படுகிறது. அதே 'ஆப்பிள் டெய்லி' சொன்ன பதில்தான் இங்கேயும். தமிழ்நாட்டிலும் இந்த வகை மோசடி நடந்ததாக எங்கும் புகார் அளிக்கப்படவில்லை. தவிர, சீனாவின் பழைய வீடியோக்கள் இங்கே தற்போது வைரலாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே, பிளாஸ்டிக் அரிசி என்று பீதியை கிளப்பி, பின்பு அப்படி எதுவும் இல்லை, அது ஏதோ ஒரு தொழிற்சாலையில் வேறு ஏதோ ஒரு பொருள் செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இருந்தும், பணத்தை எண்ணுவதற்காக மெஷினில் கொடுக்கும் முன்பு, ஒருமுறை முன்னெச்சரிக்கையாக கைகளிலேயே எண்ணிக் கொடுப்பது ஒன்றும் தவறில்லையே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement