Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``கர்நாடகா தண்ணீர் தரவில்லை என்றால் காவிரி மேலாண்மை வாரியம் பயன் தருமா?" பொன்னார் ட்விஸ்ட் !

ணநீக்க நடவடிக்கை, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், நியுட்ரினோ, ஜி.எஸ்.டி., விவசாயிகளின் டெல்லிப் போராட்டம்... என மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை நடந்த எந்தப் போராட்டங்களுக்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இப்படியான நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அதற்கான காலக்கெடுவும் முடிந்துவிட்டது.

ஆனாலும், மத்திய அரசு இதுவரை எந்தமுடிவும் தெரிவிக்காமல் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீவிரமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 31-ம் தேதி தி.மு.க சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. அது குறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு சில கேள்விகள் கேட்டோம். 

அனைத்துக் கட்சிப் போராட்டம்

``சென்னை வரும் பிரதமருக்கு தி.மு.க கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டுள்ளதே.... அது குறித்து உங்கள் கருத்து?''

``50 வருடமாக தமிழக மக்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களை மறைப்பதற்காகப் பொய்யானக் குற்றச்சாட்டுகளைக் கூறிப் போராட்டம் நடத்தி வருகிறது அந்தக் கட்சி. அது மட்டுமன்றி சிறிய தவறுகளை பெரிய விஷயமாக்கி தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளவே  தற்போது கறுப்புக்கொடிப் போராட்ட நாடகத்தையும் கையில் எடுத்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு குறைந்தபோது கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் கைக்கொட்டிச் சிரித்தார்கள். `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது' என அங்குள்ள காங்கிரஸ் அரசாங்கம் தொடர்ந்துபோராடி வருகிறது.மேலும், சித்தராமையாவின் அந்த நடவடிக்கைக்கு ஒரு கண்டனம்கூட தி.மு.க  தெரிவிக்கவில்லை. அப்போதெல்லாம் வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டு, நாடாளுமன்ற அவை நடவடிக்கையின் கடைசி நாளில் காங்கிரஸ் எம்.பி-க்களைத் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்தியது தி.மு.க. அந்தக்கட்சி தூண்டிவிடவில்லை என்றால், காங்கிரஸ் எம்.பி-க்கள் போராட்டம் நடத்தியிருக்கமாட்டார்கள். எனவே, நாடாளுமன்ற அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கிற வகையில் நடந்துகொண்ட தி.மு.க-வுக்கு எதிராக நாங்கள்தான் கறுப்புக்கொடி காட்ட வேண்டும்."

பொன் . ராதாகிருஷ்ணன்  மத்தி அமைச்சர்

 `` `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காமல் துரோகம் இழைத்துவிட்டது தி.மு.க' என்று நீங்கள் சொல்லும்  அதே குற்றச்சாட்டை பி.ஜே.பி மீதும் வருங்கால சந்ததியினர் சுமத்தமாட்டார்களா ? 

``நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு தெளிவில்லாமல் இருந்தது. நூறு வருடமாக நடந்து வரும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என அனைவருமே விரும்புவோம். அதன்காரணமாக மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள  வார்த்தைகளை வைத்து மிக கவனமுடன் எந்தத் தவறும் நேர்ந்து விடாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்." 

``வெறுமனே 'நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என மத்திய அரசு கூறி வருகிறது. அந்த நடவடிக்கை காவிரி மேலாண்மை வாரியமாக இல்லாமல் கண்துடைப்புக்காக ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துவிடுமோ என  தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள். அதுவே போராட்டம்  தீவிரமாகவும் காரணம்... இதற்கு உங்களுடைய பதில்?''

``நிச்சயமாக தமிழர்கள் உரிமைகள் நிலை நாட்டப்படும். காவிரி மேலாண்மை  வாரியம் அமைப்பது தொடர்பான கோரிக்கை ஒரு பக்கம்.... உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பக்கம்.. என்ன வேண்டுமானாலும் அமைக்கட்டும்.. உள்ளே வைத்துள்ள வார்த்தைகள் நமக்குச் சாதகமாக இருக்கிறதா? நமக்கு நியாயமாக இருக்கிறதா என்பதுதானே முக்கியம். வாரியம் அமைத்துவிட்டு கர்நாடக அரசு அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் தண்ணீர் கொடுத்துவிட்டு பிறகு நிறுத்திவிட்டால் வாரியம் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?'' 

``தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல்வேறு மட்டத்திலும் போராட்டம் நடந்து வருகிறது. ஒட்டுமொத்தத் தமிழகமும் தொடர்ந்து போராடியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இப்படியான நிலையில் இந்தக் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினாலாவது தீர்வு கிடைக்கும் என நம்புகிறார்கள் அதற்கு உங்களுடைய பதில்?''

``அனைத்துக்கட்சிக் கூட்டத்தை எதற்கு கூட்டினார்கள்? ஒரு பிரச்னையை ஆலோசிக்க... அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண.... அப்படி அதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் பிரதமரை சந்திக்க முடிவு எடுத்திருக்க வேண்டுமா இல்லையா.. ஏன் அந்தக் கூட்டத்தில் அப்படியான எந்த முடிவும் எடுக்கவில்லை? இதற்கு யார் பொறுப்பு? அதில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறதே.

இதில் மற்றொரு விஷயம்... இப்படியான நோய் தமிழகத்துக்கு எங்கிருந்து வந்தது? அதற்கு காரணமான கர்நாடக முதல்வரையாவது சந்தித்துப் பேசியிருக்க அந்தக் கூட்டத்தில் முடிவு எடுத்திருக்க வேண்டாமா? ஏன் சிறப்பு பிரதிநிதியாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் கர்நாடகம் போயிருக்கலாமே..? ஏன் இதைப்பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசவில்லை?''

``அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அப்படி ஒரு முடிவு எடுக்காமல் போக கடந்த கால நிராகரிப்புகள்தான் காரணம் எனச் சொல்லப்படுகிறதே?''

``இல்லை... பிரதமர் அலுவலகத்திலிருந்து 'நீர்வளத்துறை அமைச்சரைப் போய் பாருங்கள்' என்று சொல்லப்பட்டது. அந்தத் தகவலை பொதுவெளியில் கூறாமல், `பிரதமர் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டார்' என கூறுகிறார்கள். அவர்களுடைய அந்தக் குற்றச்சாட்டுக்கும் தமிழக அரசே பதிலும் கொடுத்துள்ளது. இவை எல்லாம் யாருடைய தவறு?"

``தமிழக அரசு சார்பில் பிரதமரைச் சந்தித்துக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரப்பட்டுள்ளதே... அதற்கே பிரதமர் பதில் சொல்லவில்லை. தி.மு.க-வுக்குப் பதில் சொல்லிவிடுவாரா பிரதமர் மோடி...?''

``கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பெரும்பாலும் நாடகம். தற்போது சூழல் அப்படி இல்லை.  மத்திய அரசு, தமிழக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நிலையில் உள்ளது. அப்படி இருக்கும்போது போய்ப் பார்க்க வேண்டும் அல்லவா...  "

காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டம்

``தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருக்கிறது. இது மத்திய அரசுக்கு தெரியவில்லையா?''

 "ஒரு விஷயம்... கர்நாடகத்தில் தேர்தல் நடக்கப்போகிறது. கர்நாடகம் சென்ற ராகுல் 'இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கைவிடப்படும்' என்றார். அவருடைய அந்தப் பேச்சுக்கு ஏன் தி.மு.க கண்டனம் தெரிவிக்கவில்லை? எனவே, கறுப்புக் கொடிகாட்ட வேண்டியது ராகுல் காந்திக்கும், கர்நாடக முதலமைச்சருக்கும்தான்.''

``காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அரசியல் ரீதியாக தி.மு.க-வையும் சித்தாராமையாவையும் ஏன் மையப்படுத்த வேண்டும்? பொதுவான விவசாயிகளின் நலனைப் பார்க்கத் தவறுவது ஏன் ?''

``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்தில் போராட்டம்.  அந்தப் போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜா, திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்பு என போட்டோவுடன் ஒரு செய்தியை  முரசொலியில் பிரசுரித்துள்ளார்கள். 

அதில் ராஜாவும், மல்லிகார்ஜுன கார்கேவும் 'தலித் அட்ராசிட்டி' என எழுதப்பட்ட வாசகங்கள்  உள்ள பதாகைகளைப் பிடித்துள்ளார்கள். அப்படியே முரசொலியில் பொய்யான செய்தியை பட்டவர்த்தனமாக வெளியிட்டு இந்த மாநிலமக்களை முட்டாளாக்கியுள்ளார்கள். இப்படியான அரசியல் செய்யக்கூடியவர்களிடத்தில் மத்திய அரசு எவ்வளவு கவனமாக செயல்பட வேண்டியுள்ளது.

காங்கிரஸ் இத்தனை ஆண்டுகள் நமக்குச் செய்த துரோகம் தற்போது செய்துகொண்டிருக்கிற துரோகத்திலிருந்து விடுபட்டு எழுந்து வந்து கொண்டிருக்கிறோம். அதனால், மத்தியில் ஆளும் அரசாங்கம் கவனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் என்ன தவறு உள்ளது?"  என்றார் கொதிப்புடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement