காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையா? தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்!

'காவிரி விவகாரம் குறித்து, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்' என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையா? தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்!

மிழக விவசாயிகளின் நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்று முடிந்துள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான மசூத் ஹுசைன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே பிரபாகர் மற்றும் கர்நாடகம், புதுச்சேரியைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர். 

சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹுசைன், "காவிரியில் தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் கர்நாடக அரசு கூடுதலாகத் தண்ணீர் வழங்கியுள்ளதால், அதனைக் கழித்துவிட்டு, எஞ்சிய நீரை தமிழகத்திற்கு வழங்கும் என்று நம்புகிறோம்" என்றார். அவருடைய இந்தப் பேட்டி தமிழகத்திற்கு நம்பிக்கை தருவதாக உள்ளது என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

காவிரி

கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்துக்கு ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி, கடந்த சனிக்கிழமை பெங்களுருவில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி, காவிரி விவகாரம் குறித்து அவர் விவாதித்தார். இந்த நிலையில், தமிழகத்துக்கு ஜூலை மாதத்திற்கு 31.34 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை முத்தரசன் சிபிஐஆணையக் கூட்டத்தில் உறுதியான நிலையில், அதுகுறித்து கர்நாடக அரசு கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது. இதற்கிடையே 'காவிரி விவகாரம் குறித்து, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்' என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், "நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்திற்கு 31.34 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், கர்நாடக அரசின் நடவடிக்கையைப் பார்க்கும்போது, அதற்கான சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஏற்கெனவே, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆணையத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக, அம்மாநில அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளார். அங்கு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பி.ஜே.பி. சார்பில் எடியூரப்பாவும் கலந்து கொண்டுள்ளார். அவர் பங்கேற்றதில் அரசியல் சூழ்ச்சி உள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது மத்திய அரசு. ஆனால், பாலிகிருஷ்ணன் சிபிஎம்கர்நாடக மாநில பி.ஜே.பி-யோ மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராகச் செயல்படுகிறது. 

எடியூரப்பாவின் இந்த நடவடிக்கை, காவிரி விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இத்தகைய அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றால், தமிழகத்திலும் உடனடியாக அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்புவிட வேண்டும். 'காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் எல்லாக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறோம்' என்பதை அந்த மாநிலத்துக்கு உறுதிப்படுத்தினால் மட்டுமே, கர்நாடக அரசுக்கு அச்சம் ஏற்படும்" என்றார்.

இதுகுறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் 'தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு 31.34 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும்' என முடிவாகியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவை கர்நாடக அரசு ஏற்கவில்லை என்றால், இங்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியே ஆக வேண்டும். தற்போதைக்கு அதைத் தவிர வேறுவழியில்லை. என்றாலும், ஜெயக்குமார் அமைச்சர் கர்நாடக அரசு என்ன செய்ய இருக்கிறது என்பதைப் பொறுத்து, அந்த மாநில அரசின் முடிவைப் பொறுத்து, தமிழகத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம்" என்றார்.

இது குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்  "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையத்தின் கூட்டமும் நடந்துமுடிந்துள்ளது. இது நம்முடைய மாநிலத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லப்போவதாக கர்நாடக அரசு சொல்வது அந்த மாநில மக்களை ஏமாற்றும் செயல். அவர்கள் வைகைச்செல்வன் செய்தித் தொடர்பாளர் நீதிமன்றத்துக்குப் போவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அப்படி இருக்கும்போது கர்நாடக அரசு இவ்வாறு கருத்துச்சொல்வது தவறானது. அரசியல்நோக்கத்தில்தான் அவர்கள் இதை எதிர்த்துக்கொண்டிருக்கின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காதபடி செய்ய கர்நாடக அரசு செயல்படுமானால் அப்போது தமிழக அரசு சரியான முடிவைச் சொல்லும்" என்று  எச்சரித்தார்   

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவு பற்றி கருத்து தெரிவித்த அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், "காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க அரசு சரியான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுத்தது, தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்க உச்ச நீதிமன்றம் மூலம் தீர்ப்பைப் பெற்றுத் தந்தது, பெங்களூருவில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கலாம் என்ற யோசனையை முறியடித்து, காவிரி ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் அமைவதற்கு முயற்சி எடுத்தது என, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குச் சாதகமான பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து மாநில அரசு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, தமிழக மக்களின் நலன்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதால், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இப்போதைக்குத் தேவையில்லை. அதையும் மீறி, கர்நாடக அரசின் சூழ்ச்சியால் தமிழகம் காவிரி நீரைப் பெறுவதில் தடை ஏற்படுமானால் அப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டலாம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!