வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (08/08/2018)

கடைசி தொடர்பு:11:24 (08/08/2018)

தோல்வி, அவர் சட்டப்பேரவை வரலாற்றில் இல்லை! - சட்டப்பேரவையில் கருணாநிதி

தான் சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் தோல்வியே கண்டிராத ஒரு வேட்பாளர் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. தமிழகத்தின் எந்தவோர் அரசியல் தலைவரும் இதுபோல அதிகமுறை வெற்றி பெற்றதில்லை.

தோல்வி, அவர் சட்டப்பேரவை வரலாற்றில் இல்லை! - சட்டப்பேரவையில் கருணாநிதி

மிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தல்களில் 13 முறை போட்டியிட்டு, எல்லா முறையும் வெற்றிபெற்றவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் வெற்றி பெற்ற தொகுதிகள்:

1957- குளித்தலை
1962 - தஞ்சாவூர் 
1967 - சைதாப்பேட்டை 
1971 - சைதாப்பேட்டை 
1977 - அண்ணா நகர் 
1980 - அண்ணா நகர் 
1984 - எம்.எல்.சி-யாக இருந்ததால் போட்டியிடவில்லை
1989 - துறைமுகம் 
1991 - துறைமுகம் 
1996 - சேப்பாக்கம் 
2001 - சேப்பாக்கம் 
2006 - சேப்பாக்கம் 
2011 - திருவாரூர்
2016 - திருவாரூர்

தான் சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் தோல்வியே கண்டிராத ஒரு வேட்பாளர் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. தமிழகத்தின் எந்தவோர் அரசியல் தலைவரும் இதுபோல அதிகமுறை வெற்றி பெற்றதில்லை. தவிர, தொடர்ச்சியான வெற்றியையும் பெற்றதில்லை. தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்து சாதனை படைத்தவர் கருணாநிதி. 

1957 தேர்தல்

தி.மு.க. தலைவர் கருணாநிதி, கடந்த 1957-ம் ஆண்டில் முதல் முறையாகக் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டார். தி.மு.க. சந்தித்த முதல் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் தருமலிங்கத்தை விட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று கருணாநிதி வெற்றிபெற்றார். 

1962 தேர்தல் 

இந்த முறை தி.மு.க 50 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 1962 தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் 32,145 வாக்குகள் பெற்று கருணாநிதி வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை விட 1,928 வாக்குகள் அதிகம் பெற்றார். 


மாறன் கருணாநிதி

1967 தேர்தல்

தி.மு.க.வை அரியணையில் அமர வைத்த சட்டமன்றத் தேர்தல் இது. 138 தொகுதிகளில் வெற்றிபெற்று தி.மு.க. முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. இம்முறை சைதாப்பேட்டையில் போட்டியிட்ட கருணாநிதி 53,401 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் விநாயகமூர்த்தி 32,917 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 

1971 தேர்தல்

தி.மு.க. நிறுவனர் அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் 1971-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இ.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 183 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்தது திமுக. இந்தத் தேர்தலில் கருணாநிதி, மீண்டும் சைதாப்பேட்டையில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் 63,334 வாக்குகளைப் பெற்றார்.

1977 தேர்தல்

தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேறி, அ.தி.மு.க-வை உருவாக்கிய பின்னர், நடைபெற்ற தேர்தல். 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றிபெற்றிருந்தார். அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 130 இடங்களில் வெற்றிபெற்று, எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். என்றாலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தான் போட்டியிட்ட அண்ணா நகர் தொகுதியில் 43,076 வாக்குகள் பெற்று வென்றார்.

1980 தேர்தல் 

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தல் இது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க 162 தொகுதிகளைப் பிடித்து மீண்டும் ஆட்சியமைத்தது. தி.மு.க. கூட்டணி 69 இடங்களில் வென்றது. இந்த முறையும் அண்ணா நகரில் போட்டியிட்ட கருணாநிதி, 51,290 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். 

1984 தேர்தல்

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க என்ற இரு கட்சிகளின் தலைமையிலான அணிகள் மோதிக்கொண்ட இந்தத் தேர்தலின்போது, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அ.தி.மு.க மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தத் தேர்தல் நடைபெற்றபோது, எம்.எல்.சி-யாக கருணாநிதி இருந்ததால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

1989 தேர்தல் 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்து, தேர்தலைச் சந்தித்தன. ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையில் (ஜா) ஓரணியும் ஜெயலலிதா (ஜெ) தலைமையில் மற்றோர் அணியும் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 170 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியைப் பிடித்தது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கருணாநிதி 3-வது முறையாக முதல்வரானார். அவர் துறைமுகம் தொகுதியில் 41,632 வாக்குகள் பெற்றார்.

கருணாநிதி

1991 தேர்தல்

அ.தி.மு.க. அணிகள் இணைந்து ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ராஜீவ் காந்தி, படுகொலை செய்யப்பட்டதால், நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. என்றாலும், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, 890 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

1996 தேர்தல்

ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. தி.மு.க. மற்றும் மூப்பனார் தலைமையிலான த.மா.கா கூட்டணி அமோக வெற்றிபெற்றது. தி.மு.க தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 46,097 வாக்குகள் பெற்று வென்றார்.

2001 தேர்தல் 

தி.மு.க. அரசுக்கு நற்பெயர் இருந்தபோதிலும், கூட்டணி பலத்தால் அ.தி.மு.க வெற்றிபெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். எனினும், கருணாநிதி தான் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் 29,836 வாக்குகளுடன் வென்று, எதிர்க்கட்சித் தலைவரானார். 

2006 தேர்தல்

மீண்டும் சேப்பாக்கம் தொகுதியிலேயே போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தார். அவர் 34,188 வாக்குகள் பெற்றார். 

2011 தேர்தல்

தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையிலான இரு அணிகளில், அ.தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். ஆனால், இந்த முறை கருணாநிதி தன் சொந்த மாவட்டமான திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1,09,014 வாக்குகள் பெற்று சாதனை வெற்றிபெற்றார்.

2016 தேர்தல் 

இந்த முறையும் கருணாநிதி திருவாரூர் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றார். கருணாநிதி வெற்றிபெற்ற போதிலும், 89 தொகுதிகளைக் கைப்பற்றி சட்டமன்ற வரலாற்றில் மிக அதிக இடங்களைப் பெற்ற எதிர்க்கட்சி எனும் அந்தஸ்தை தி.மு.க. பெற்றபோதிலும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. இந்த முறை திருவாரூர் தொகுதியில் கருணாநிதி 1,21,473 வாக்குகள் பெற்றி தொடர்ந்து 13-வது முறையாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில், ஏன் இந்திய அளவிலும் வேறெந்தத் தலைவரும் நிகழ்த்த முடியாத சாதனையைத் தொடர்ந்து 13 முறை சட்டசபைக்குத் தேர்வு பெற்று நிகழ்த்திய பெருமை கருணாநிதியையே சேரும். களம் கண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வென்ற பெருமைக்குரியவர் தி.மு.க. தலைவர். இனிமேலும், இவர் போன்ற தலைவர் உருவாகப் போவதில்லை...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்