வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (12/10/2018)

கடைசி தொடர்பு:17:58 (12/10/2018)

சிக்கியது இறைச்சி சப்ளை பில்! பிரபல ஹோட்டல்களைக் குறிவைக்கும் அதிகாரிகள்

ஓட்டல் இறைச்சி

மாடு, கன்றுகுட்டி, நாய் போன்ற பிராணிகளின் இறைச்சியை வெளிமாநிலங்களிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் சென்னைக்குக் கடத்தி வந்து ஆட்டு இறைச்சி என்று சொல்லி பிரபல ஹோட்டல்களுக்கு சப்ளை செய்து கொள்ளை லாபம் அடித்து வருகிறது ஒரு பிரபல கும்பல். ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.450 வரை விற்கப்படுகிறது. அதே சமயம் மற்ற பிராணிகளின் இறைச்சி விலை ரூ.100-க்கும் குறைவானது. இதைக் கருத்தில் கொண்டு, இறைச்சி கடத்தல் கும்பல் சென்னையில் சுற்றித்திரிகிறது. இதுஒருபுறமிருக்க, சிந்தாதிரிப்பேட்டை ஏரியாவில் பிரபலமானவர் சக்திவேல். இவரது கஸ்டடியில் இருந்த 2,000 கிலோ கெட்டுப்போன இறைச்சியைச் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் கைப்பற்றி அழித்தனர். இதற்கு முன்புகூட, இவர் மீது திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் இதே குற்றத்துக்காகப் புகார் பதிவாகியிருக்கிறது.

சம்பவத்தன்று சக்திவேலு இடத்தில் அதிகாரிகளை சோதனை நடத்தியபோது பில் புக் ஒன்று சிக்கியது. அதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ந்தனர். சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு இறைச்சி சப்ளை செய்த வகையில் பணப் பாக்கி இருப்பது தொடர்பான தகவல்கள் அதில் எழுதப்பட்டிருந்ததாம். அடுத்தகட்டமாக, அதில் குறிப்பிட்டுள்ள ஹோட்டல் தரப்பினர் மீது என்ன வகையான நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்ட ஆலோசனை நடக்கிறது. இதே நேரத்தில், கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வெளிமாநில ரயிலில் 1,800 கிலோ இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றினர். சாதாரண தெர்மோ கூல் பேக்கில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் இறைச்சி கெட்டுப்போன நிலையில் இருந்தது. இப்படி அடுத்தடுத்து கெட்டுப்போன இறைச்சி விவகாரம் சென்னை ஹோட்டல் தரப்பினரை கதிகலங்க வைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க