வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (03/11/2018)

கடைசி தொடர்பு:15:30 (03/11/2018)

ஆம்னி பேருந்துகளின் தீபாவளி கட்டணம் எவ்வளவு தெரியுமா? #VikatanInfographics

னைவரும் எதிர்பார்த்த தீபாவளி நெருங்கி வந்துவிட்டது. சொந்த ஊரிலிருந்து பல்வேறு ஊர்களுக்குப் பிழைப்புக்காகச் சென்றவர்கள் புத்தாடைகளையும், பட்டாசுகளைத் தயாராக வாங்கி வைத்து விட்டு, பயணம் செய்ய ஆயத்தமாக இருப்பார்கள். தீபாவளிக்குச் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பலர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யக் காத்திருந்து, முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து போனதால், பேருந்துப் பயணத்தை மட்டுமே நம்பி இருக்கும் பலருக்கு உதவியாக இருப்பது ஆம்னி பேருந்துதான். அரசுப் பேருந்துகளையும், சிறப்புப் பேருந்துகளையும் நம்பி பெரும்பாலான மக்கள் பயணம் செய்வதில்லை. 

ஆம்னி

மதுரை, கன்னியாகுமரி போன்ற பல்வேறு ஊர்களுக்குச் செல்பவர்கள் 8 மணி நேரத்துக்கும் மேலாகப் பயணம் செய்வதாக இருப்பதால், உடல் அதிகம் சோர்வடையாமல் இருப்பதற்காக, ஆம்னிப் பேருந்துகளில் சொகுசுப் பயணம் செய்வதையே அதிகளவில் விரும்புகின்றனர். பலரும் ஆம்னி பேருந்துப் பயணத்தை விரும்பக்கூடிய நிலையில், பண்டிகைக் காலங்களில் வெளியூர் மக்கள் அனைவரும் எப்படியும் பயணம் செய்தே ஆக வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு, வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தைவிடப் பல மடங்கு கட்டணத்தை, ஒவ்வொரு இரவும் மாற்றி மாற்றி, விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே வசூலிப்பதைத் தனியார் பேருந்து நிறுவனங்கள் ஒவ்வோர் வருடமும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. உதாரணமாக எடுத்துக்கொண்டால், சென்னையிலிருந்து மதுரைக்கு எஸ்.ஆர்.எஸ் ஆம்னி பேருந்தில் திருவிழா அன்று 756 ரூபாய் மட்டுமே. ஆனால் அதற்கு முன், ஒரு வாரகாலமாக 2100, 1701, 1176 என்று ஒவ்வொரு நாளும் கட்டணத்தை மாற்றிக்கொண்டே வருகின்றன. இதேபோல்தான் அனைத்து ஆம்னி பேருந்து நிறுவனங்களும் செய்கின்றன.

ஆம்னி

ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைச் சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் செல்லும் மக்கள், எளிதில் செல்லும் வகையில், தமிழக அரசும் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னையில் இருந்து 4,542 சிறப்பு பேருந்துகள் உட்பட 11,367 பேருந்துகளும் பிற மாவட்டங்களில் இருந்து 9,200 பேருந்துகளும் என மொத்தம் 20,567 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு உட்பட 30 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஆம்னி பேருந்துகளுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய பல்வேறு இணையதளங்கள் இருக்கின்றன. கட்டுரைக்காக அந்தந்த பேருந்து நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து கட்டணங்களின் தகவல்கள் எடுக்கப்பட்டவை. கட்டணங்களும் பேருந்து புறப்படும் நேரமும் மாறுதலுக்கு  உட்படலாம். அந்தந்த இணைய தளத்தின் மூலமாக சென்னை-மதுரை, சென்னை-கோவை, சென்னை-கன்னியாகுமரி, சென்னை-பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு சாதாரண நாள்களில் கட்டணம் எவ்வளவு, விசேஷ நாள்களில் எவ்வளவு என்பது குறித்து எடுக்கப்பட்டவை இவை.

ஆம்னி

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். எனவே, நீங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும்போது அதிகமாகக் கட்டணம் இருக்கிறது என்று தெரிந்தால் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவியுங்கள்.

ஆம்னி

ஒவ்வொரு வருடமும் விழாக்காலங்களில் தொடர்ந்து ஆம்னி பேருந்து நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக கட்டணக் கொள்ளையை செய்து வருவதை போக்குவரத்துத்துறையும், அதன் அமைச்சரும் நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆம்னி

ரயில் பயணம் மற்றும் தமிழக அரசு இயக்கிய விழாக்கால சிறப்பு பேருந்துகளில் பயணச்சீட்டு கிடைக்காமல் வேறுவழியின்றி ஆம்னி பேருந்துதான் கதி என்று பயணம் செய்தவர்களா நீங்கள்?. ஆமாம் பாஸ் என்றால், எவ்வளவு செலுத்தி டிக்கெட் எடுத்தீர்கள் என்பதையும், நீங்கள் ஊருக்குச் சென்ற உங்கள் அனுபவத்தை கமென்ட்டில் தெரிவிக்கலாமே.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க