வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (24/11/2018)

கடைசி தொடர்பு:08:00 (24/11/2018)

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும் சென்னை -ஆய்வு தரும் சுவாரஸ்ய தகவல்கள்!

துவரையில் முன்மொழியப்பட்ட  அனைத்து விதமான விரிவாக்கப் பணிகளும் நிறைவடைந்தால் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகச் சென்னை உருவாகும் என்று  ஆய்வு மூலம்  தெரியவந்துள்ளது.

சென்னை

சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூர் கொள்கை ஆய்வுக் கழகம்  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள்  முழுவதுமாகவும், வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாக்களைச் சேர்ந்த சில பகுதிகள் வரையும் இணைத்தால் சென்னையின் பரப்பளவு  தற்போது இருப்பதை விட ஏழு மடங்கு  அதிகரித்து 8,878 சதுர கிலோமீட்டராக உயரும்.  சென்னை பெருநகரம் தற்போது 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்மூலம்  8,878 சதுர கி.மீட்டராக விரிவடையும். இதன்மூலம் சென்னை பெருநகரம் 7 மடங்கு பெரியதாகிறது.

சென்னை

பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்கள் இதேப்போன்று விரிவாக்கம் செய்யப்பட்டு முறையான வளர்ச்சி பெற்றுள்ளன. இந்தியாவில் உள்ள பெருநகரங்களான மும்பை 4,354 சதுர கி.மீட்டர் பரப்பளவில் உள்ளது. ஐதராபாத் 7,100 சதுர கி.மீட்டர் பரப்பளவும், பெங்களூரு 8,005 சதுர கி.மீட்டர் பரப்பளவுடனும் உள்ளன. இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் பெரிய பெருநகரமாக தற்போது சென்னை மாறுகிறது. “முன்மொழியப்பட்ட விரிவாக்கம் செய்யப்பட்டால், சென்னையை விட தேசிய தலைநகர் மண்டலம் மட்டுமே பெரிய பகுதியாக இருக்கும்” என்று தற்போதைய ஆய்வறிக்கை கூறுகிறது.

Chennai 0

தேசிய தலைநகர் மண்டலம் என்பது டெல்லி, நொய்டா, குருக்ராம் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியாகும். தேசிய தலைநகர் மண்டலத்தின் ஒட்டுமொத்த பரப்பளவு 53,817 சதுர கிலோமீட்டராகும். தற்போது சென்னையின் பரப்பளவு 1,189 சதுர கிலோமீட்டராகவும், மும்பையின் பரப்பளவு 4,354 சதுர கிலோமீட்டராகவும், ஹைதராபாத்தின் பரப்பளவு 7,100 சதுர கிலோமீட்டராகவும், பெங்களூருவின் பரப்பளவு 8,005 சதுர கிலோமீட்டராகவும் இருக்கிறது. வெறும் 426 சதுர கிலோமீட்டராக இருந்த சென்னையின் பரப்பளவு 1975ம் ஆண்டில் நான்கு மடங்கு உயர்ந்து 1,189 சதுர கிலோமீட்டராக உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதமே சென்னையுடன் பிற மாவட்டங்களை இணைக்கத் தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஆணையையும்  வெளியிட்டது. இது குறித்து  கடந்த ஆண்டு,  சட்டசபையில்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்,  சென்னை மாநகரம் பரந்து விரிந்து வருகிறது. இதனால் பெருநகர வளர்ச்சி குழுமமாகத் தற்போது மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பெருநகர குழுமம் கடந்த 2008 -ம் ஆண்டு இரண்டாவது மிகப்பெரிய திட்டத்தை வெளியிட்டது. அதன்படி வருகிற 2026 -ம் ஆண்டில் மக்கள்தொகை 1 கோடியே 25 லட்சம் ஆக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரின் வளர்ச்சியைச் சமநிலைப்படுத்தவும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பை உருவாக்கவும் புறநகர் பகுதிகள் உருவாக்கப்பட்டன. 

சென்ட்ரல்

குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பெருமளவில் தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் அங்கும் மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் சென்னையின் புறநகர் பகுதியும் மிக அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் பல தொழிற்சாலைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு ஒழுங்கற்ற முறையில் உருவாகும் கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டிய நிலை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரின் எல்லையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையைப் பெருநகரமாக்க திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் இணைக்கப்படுகின்றன. அத்துடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தாலுகாவும் சேர்க்கப்படுகிறது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க