வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (05/01/2019)

கடைசி தொடர்பு:10:03 (08/01/2019)

திருவாரூர் அ.தி.மு.க. வேட்பாளர் மலர்விழி கலியபெருமாள்?

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தி.மு.க., அ.ம.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் அறிவித்துவிட்டன. அமைதி காத்திருந்த அ.தி.மு.க-வும் வேட்பாளரைத் தேர்வுசெய்துவிட்டதாகவும், இன்று மாலை அறிவிப்பு வெளியாகுமென்றும் தெரிகிறது. 

கடந்த 2016 தேர்தலில், தி.மு.க தலைவர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு 27 சதவிகித வாக்குகளைப் பெற்ற பன்னீர்செல்வம் வேட்பாளருக்கான ரேஸில் உள்ளார். ஆனால், சீட்டை தட்டிச் செல்லப்போவது மலர்விழி கலியபெருமாள்தான் என்கின்றன அ.தி.மு.க  தலைமையக வட்டாரங்கள். உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு நெருக்கமானவரும், திருவாரூர் நகர அம்மா பேரவைச் செயலாளராக இருக்கும் கலியபெருமாளின் மனைவிதான் மலர்விழி. 

திருவாரூர் தொகுதியில், பிள்ளைமார், அட்டவணை, முஸ்லிம் சமுதாயத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுக்கு வாக்கு வங்கியோடு உள்ளனர். கள்ளர் சமுதாயத்தினருக்கு 9 சதவித வாக்குகள் உள்ளன. பூண்டி கலைவாணனை தி.மு.க.வும், எஸ்.காமராஜை அ.ம.மு.க-வும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளன. இவர்கள் இருவருமே கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 

பெண் வேட்பாளரை நிறுத்தினால் பெண் வாக்காளர்களையும் கையில் எடுக்க முடியும் எனச் சில மூத்த அமைச்சர்கள் கருத்துக் கூற, கலியபெருமாளின் மனைவி மலர்விழியின் பெயரை அ.தி.மு.க  'டிக்' செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், கடைசி வரை ஒரு கை பார்த்துவிடுவது என திருவாரூர் தொகுதிக்காகப் பன்னீர்செல்வம் முட்டிமோதிவருவதாகக் கூறப்படுகிறது. 

- ந.பொன்குமரகுருபரன்