பிரமாண்டமேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி! | vikatan cinema awards function starts in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (05/01/2019)

கடைசி தொடர்பு:22:21 (05/01/2019)

பிரமாண்டமேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி!

கடந்த 2018-ம் ஆண்டில் சாதித்த சினிமாக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விகடனின் சினிமா விருதுகள் நிகழ்ச்சி பிரமாண்டமாக, சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் தொடங்கியது. 

 

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் சாதிக்கும் கலைஞர்களை ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கி கௌரவித்து வருகிறான் விகடன். அந்தவகையில் கடந்த 2018-ம் ஆண்டுக்கான விகடன் விருது 30-க்கும் மேற்பட்ட துறைகளில் வழங்கப்படுகிறது. பிரபல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் விழாவில் கலந்துகொள்கின்றனர்.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

சிறந்த படம் - மேற்குத் தொடர்ச்சி மலை | சிறந்த இயக்குநர் - மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்) | சிறந்த நடிகர் - தனுஷ் (வடசென்னை, மாரி-2) | சிறந்த நடிகை - த்ரிஷா (`96) | சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன் (வடசென்னை, பரியேறும் பெருமாள், காலா) | சிறந்த வில்லன் - நானா படேகர் (காலா) | சிறந்த வில்லி - வரலட்சுமி (சண்டக்கோழி-2, சர்கார்) | சிறந்த குணச்சித்திர நடிகர் - அமீர் (வடசென்னை) | சிறந்த குணச்சித்திர நடிகை - ஈஸ்வரி ராவ் (காலா) | சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு (கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள்) | சிறந்த நகைச்சுவை நடிகை - ரேவதி (குலேபகாவலி) | சிறந்த அறிமுக இயக்குநர் -  லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை) | சிறந்த அறிமுக நடிகர் - ஆதித்யா பாஸ்கர் (`96) | சிறந்த அறிமுக நடிகை - ரைஸா வில்சன் (பியார் பிரேமா காதல்) | சிறந்த குழந்தை நட்சத்திரம் - தித்யா பாண்டே (லக்ஷ்மி)

 

 

 

 

 

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

சிறந்த ஒளிப்பதிவு - நீரவ் ஷா (2.0) | சிறந்த படத்தொகுப்பு - ஷான் லோகேஷ் (ராட்சசன்) | சிறந்த கதை - மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்) | சிறந்த திரைக்கதை - வெற்றி மாறன் (வடசென்னை) | சிறந்த வசனம் - பா.இரஞ்சித், மகிழ்நன் பா.ம, ஆதவன் தீட்சண்யா (காலா) | சிறந்த கலை இயக்கம் - ஜாக்கி (வடசென்னை) | சிறந்த ஒப்பனை - பானு, ஏ.ஆர்.அப்துல் ரஸாக், லெகசி FX (2.0) | சிறந்த சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன் (வடசென்னை, காலா, செக்கச்சிவந்த வானம்) | சிறந்த நடன இயக்கம் -  ஜானி (குலேபகாவலி) | 

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

சினிமா விருதுகள்

சிறந்த ஆடை வடிவமைப்பு - ஏகா லகானி (செக்கச்சிவந்த வானம்) | சிறந்த அனிமேஷன் விஷுவல் எஃபெக்ட்ஸ் - (ஷங்கர், வி.ஸ்ரீநிவாஸ் மோகன் - 2.0) | சிறந்த பாடலாசிரியர் - கார்த்திக் நேத்தா (`அந்தாதி', 'காதலே காதலே', 'Life Of Ram' - `96) | சிறந்த பின்னணிப் பாடகர் - அந்தோணி தாசன் ('சொடக்கு மேல' - தானா சேர்ந்த கூட்டம்) | சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி (`96) | சிறந்த தயாரிப்பு - மேற்குத் தொடர்ச்சி மலை (விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்) | சிறந்த படக்குழு - `96 | அதிக கவனம் ஈர்த்த படம் -  2.0 | சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் -  கடைக்குட்டி சிங்கம்