இளையராஜா பற்றிய 5 சுவாரஸ்யத் தகவல்கள்! #Ilaiyaraaja75 #ContestClues | Ilaiyaraaja 75 contest clues page

வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (01/02/2019)

கடைசி தொடர்பு:12:47 (01/02/2019)

இளையராஜா பற்றிய 5 சுவாரஸ்யத் தகவல்கள்! #Ilaiyaraaja75 #ContestClues

இசைக்கு 7 ஸ்வரங்கள். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை 5 ஸ்வரங்கள்தான். இ....ளை....ய...ரா...ஜா.  மகிழ்ச்சியோ சோகமோ பரவசமோ கண்ணீரோ புன்னகையோ அதை இளையராஜா இசையில் கரைப்பவர்கள் நாம். அத்தகைய மகத்தான கலைஞன் இளையராஜாவின் 75 வது பிறந்தநாளையொட்டி, பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

பிப்ரவரி 2ம் தேதி அன்று பிரபல முன்னணி நடிகர்கள், ராஜாவின் எவர்க்ரீன் பாடல்களுக்கு நடனமாட இருக்கிறார்கள். அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை, ராஜாவின் இசைக் கச்சேரி நடக்க இருக்கிறது. இளையராஜாவின் இந்த பிரமாண்ட மேடைக்காக புதாபெஸ்ட்டில் இருந்து இசைக் கலைஞர்கள் வருகிறார்கள்.

* பாலாவின் இயக்கத்தில் ராஜா இசையமைத்த தாரை தப்பட்டைதான், அவரது ஆயிரமாவது படம். கமல் ஒருமுறை பேட்டியில், ராஜாவுக்கு இசை நிகழ்ச்சி நடத்துபவர்கள், எங்களின் படங்களுக்கு மட்டுமே தனியாக ஒரு நிகழ்வு நடத்தலாம். ஏனெனில் அத்தனை படங்கள் நாங்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறோம் என்றார். ஆம், 16 வயதினிலே தொடங்கி, கமலின் சமீபத்திய 'சபாஷ் நாயுடு' வரை ராஜாதான் இசை. இளையராஜா, கமல் அளவுக்கு யாருக்குமே திரைப்படங்களில் இசையமைத்தது இல்லை என்றே சொல்லலாம். 

* நாயகன் படத்துக்கும், அஞ்சலி படத்துக்கும் இடையே, மணிரத்னம் இயக்கிய ஒரே தமிழ்ப் படம் `அக்னி நட்சத்திரம்' தான். தெலுங்கில் கீதாஞ்சலி இயக்கி இருந்தார். அது தமிழில், 'இதயத்தை திருடாதே'வாக மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், 'நாயகன்' இளையராஜாவின் 400வது படம். அஞ்சலி இளையராஜாவின் 500வது படம். இளையராஜாவின் ஒவ்வொரு நூறு படமுமே ஏதோவொரு விசேஷம் நிறைந்தவை. 400, 600, 900 எல்லாமே கமல் படங்கள்தாம். முதல் சதத்தை மட்டும் நண்பர் பாலு மகேந்திராவுக்குக் கொடுத்தார் இசைஞானி. 

இளையராஜா

* ஹேராம் பட வேலைகள் போய்க்கொண்டிருந்த சமயத்தில், ``எல்லாம் சரி, உங்க வேலைகளை முடிச்சுக்கிட்டீங்க. எனக்கு ஒரு பாட்டுப் போட இடமில்லாமப் பண்ணிட்டீங்களே’’ என்றார். ``இதுவே பெரிய சாதனை. அதென்ன பெரிய விஷயம்’’ என்றேன். ``இல்ல, எனக்கு ஒரு இடம் இருக்கு’’ என்றார். 

முன்பெல்லாம் பாட்டுப்போட்டிகளில் தன் திறமையைப் பார்வையாளர்களுக்குக் கடத்த, `சிந்தனை செய் மனமே’, ‘ஒருநாள் போதுமா’ போன்ற பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது, `ஒருநாள் போதுமா’ பாடலை அதைப் பாடிய பாலமுரளி சாருக்கும் பெரிய வீணை வித்வான்களுக்கும் பாடிக்காட்டியிருக்கிறேன். அப்படி இன்று தனக்குப் பாட வரும் என்பதை நிரூபிப்பதற்காக, பாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் பாடிக்காட்டும் ஒரு ஐக்கானிக் பாடலாக `இசையில் தொடங்குதம்மா’ பாடல் அமைந்திருக்கிறது. அப்படி அவரே முடிவு செய்து, கம்போஸ் பண்ணி அவரே எழுதியதுதான், ``இசையில் தொடங்குதம்மா’’ என்ற பாடல். 

இளையராஜா

* ராஜா பிரம்மிப்பாய்க் கருதிய பாடல் ஆசிரியர்கள் என்றால், அதில் எப்போதும் கண்ணதாசனுக்கு முதல் இடமுண்டு. அது நிறம் மாறாத பூக்கள் படத்துக்கான கம்போஸிங் நேரம். கண்ணதாசன் வெற்றிலையை மென்றுகொண்டேதான் சிச்சுவேஷனைக் கேட்பாராம். டக்கென அவர் துப்பும் போது, அது சிச்சுவேஷனுக்கான்னு கூட கண்டுபிடிக்கமுடியாது என லயித்து நக்கல் அடித்திருக்கிறார் ராஜா. மெட்டைக் கேட்டதும், டக்கென, ஆயிரம் மலர்களே மலருங்கள் என்றாராம் கண்ணதாசன். அடுத்தமெட்டுக்கும் அதையே வைத்துக்கொள் என்றாராம் கவிஞர். அதுமெட்டுக்கு அப்படியே பொருந்திப் போனது என அதிசயிக்கிறார் ராஜா. 

* கமெர்ஷியல் படங்களுக்கான பெர்ஃபெக்ட் டெம்ப்ளேட்டை உருவாக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அவர் இயக்கிய முரட்டுக்காளை அதற்கு மிகச்சிறந்த உதாரணம். ரஜினியின் 25 படங்களை இயக்கியிருக்கிறார் முத்துராமன். அவர் இயக்கிய 75 படங்களுள் பெரும்பாலான படங்களுக்கு ராஜாதான் இசை. ராஜா இசை இல்லாத முத்துராமின் படங்களைப் பார்ப்பதே அரிது.

ராஜாவின் இசையில் நம்மை மூழ்கடிக்க இருக்கும் இந்த நிகழ்வுகளுக்கு டிக்கெட்டுகள் உங்களுக்கு இலவசமாக வேண்டுமா? இங்கு க்ளிக் செய்யுங்கள்.


டிரெண்டிங் @ விகடன்