`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்!' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க | admk doesn't like h raja to contest in election

வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (19/02/2019)

கடைசி தொடர்பு:11:08 (21/02/2019)

`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்!' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க

அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணி இணைந்து வரும் தேர்தலைச் சந்திக்கின்றது. இந்தத் தேர்தலில் ஹெச்.ராஜா போட்டியிடக்கூடாது என்று அ.தி.மு.க தலைமை பா.ஜ.க-விடம் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

ராஜா

அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி இன்று உறுதியாகிவிட்டநிலையில், பா.ம.க-வுக்கு 7 தொகுதிகளும் பா.ஜ.க-வுக்கு 5 இடங்களுமே கிடைத்துள்ளன. மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என்கிறது பா.ஜ.க. தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை அல்லது மத்திய சென்னைத் தொகுதியில் போட்டியிடவிருந்த நிலையில், அதை அ.தி.மு.க விரும்பவில்லை என்ற தகவல்கள் வந்துள்ளன.

அதிமுக

இதுகுறித்து அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் கூறுகையில், ``பா.ஜ.க கூட்டணி ஏற்கெனவே உறுதியானதுதான்.  இந்தத் தேர்தலில் போட்டியிட ஹெச்.ராஜா விரும்பி இருந்தார். அக்கட்சியின் தலைமையும் அதை ஏற்றுக்கொண்டது. தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச வந்த பியூஷ் கோயலிடம், ஹெச்.ராஜாவுக்கு தமிழகத்தில் இருக்கும் `செல்வாக்கு' குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. சாரணர் இயக்கத் தேர்தல் தோல்வி, ஆர்.கே நகர் தோல்வி, பெண் ஊடகவியலாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு, நீதிமன்றத்தை சர்ச்சையாகப் பேசியது என அவர்மீது புகார்பட்டியல் கொடுக்கப்பட்டது.

 

கூட்டணி அறிவிப்பு


இதை பா.ஜ.க தலைமையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ராஜ்யசபா எம்.பி பதவி தருவதாக ஹெ.ராஜாவுக்கு தலைமை வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இதனால் அதிருப்தியடைந்த ஹெச்.ராஜா, கூட்டணி அறிவிப்புக்கு வராமல், பெங்களூரு சென்றிருக்கிறார்'' என்றார்.


[X] Close

[X] Close