பிரசாரத்துக்காக தமிழகம் வந்த ராகுல் - சென்னையில் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல்! | Conversation of rahul with chennai students

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:24 (16/03/2019)

பிரசாரத்துக்காக தமிழகம் வந்த ராகுல் - சென்னையில் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல்!

ராகுல்

சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி  மாணவிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி உரையாடினார். இந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தி  ஜீன்ஸ் டி-ஷர்ட்  வந்து, மிகுந்த  உற்சாகமாக  மாணவிகளுடன் உரையாடினார். மாணவிகள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும்  மிகத்  தெளிவாகவும், சிறப்பாகவும் பதில் அளித்தார். ஒரு மாணவி, "உங்கள் அம்மாவிடம் உங்களுக்குப் பிடித்தது எது?" என்று  கேள்வி எழுப்பினார். அதற்கு "திறமை" என்று கூறிய ராகுல், "உங்களுடைய  அம்மாவிடம் பிடித்தது  எது" என மாணவியிடம்  கேட்டார். அதற்கு  அந்த மாணவி, "யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாமல் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் பாங்கு" என்றார்.

ராகுல் காந்தி

 தொடர்ந்து பேசிய ராகுல், ``நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது. குறிப்பாக, இந்த மேடையில் இருந்து  நீங்கள் கேள்வி கேட்க  வேண்டும். நீங்கள் அமர்ந்துள்ள  இடத்தில் இருந்து பதில் சொல்ல வேண்டும். அப்படியான  நடைமுறைதான் எனக்குப் பிடித்துள்ளது. உங்களுக்கும்  எனக்கும்  உள்ள  இந்த ஏற்றத் தாழ்வுகளை நான் விரும்ப வில்லை" என்றார். அவருடைய  இந்தப் பேச்சை மாணவிகள்  உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, மோடியைப்  பற்றி எழுந்த மற்றொரு கேள்விக்கு, எத்தனை முறை பிரதமர் மோடி  இப்படி ஆயிரக்கணக்கான மாணவிகள் முன்பு  நின்றுபேசியுள்ளார்... அதிலும், அந்த மாணவிகள் கேட்ட  ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாக  பதில் கூறியுள்ளார் என்றார். ராகுலின்  இப்படியான பேச்சைக் கேட்டு  மாணவிகள்  ஆரவாரம் செய்தனர் . 


[X] Close

[X] Close