'பிரசார வாகனத்தில் அப்சல்குரு படமா..?' - கன்னையா குமாரை சுற்றிவரும் போலிச் செய்திகள்! #FakeNews | Fake messages around Kanniya Kumar!

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (03/05/2019)

கடைசி தொடர்பு:20:10 (03/05/2019)

'பிரசார வாகனத்தில் அப்சல்குரு படமா..?' - கன்னையா குமாரை சுற்றிவரும் போலிச் செய்திகள்! #FakeNews

நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு படத்தைத் தேர்தல் பிரசாரத்தில் கன்னையா குமார் பயன்படுத்துவதாகச் சிலர் போலிச் செய்திகளைப் பரப்பிவருகின்றனர்.


பீகார் மாநிலம் பெகுசாராய் மக்களவைத் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னையா குமார் தான் வேட்பாளர். பெகுசாராய் தொகுதியில்  தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுவருபவருக்கு ஆதரவாக, குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி முதல் பெங்களூரு மத்திய தொகுதி சுயேச்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளும் கன்னையாவுக்கு ஆதரவாகப் பிரசாரம்செய்தனர். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து கன்னையா போட்டியிடுகிறார்.  ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில், தன்வீர் ஹாசனும் களத்தில் இருக்கிறார். இதனால், பெகுசாராய் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

                                   

 

 குமார்  பெகுசாராய், மண்ணின் மைந்தன் என்ற முறையில் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்துவருகின்றனர். இதனால், அப்சல் குருவின் படத்தைத் தேர்தல் பிரசாரத்தில் கன்னையா குமார் பயன்படுத்துவதாக சிலர் போலிச் செய்திகளைப் பரப்பிவருகின்றனர்.

கன்னையா குமார்

அதை பி.ஜே.பி-யைச் சேர்ந்த சிலர், தங்களுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். ஆனால், அந்தப் பிரசார வாகனத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் இடம் பெற்றிருந்தது. அதை போட்டோஷாப் செய்து, அப்சல் குரு படத்தை வைத்து போலிச் செய்திகளைப் பரப்பிவருகின்றனர்.